தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

தமது கிழக்கு விஜயம் கண்காணிக்கப்பட்டது!- பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

சுவாமி அரசியல் புரோக்கர்! குரோதத்துடன் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டது: வழக்கறிஞர் தடா சந்திரசேகர்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 01:54.05 PM GMT ]
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது, உள்நோக்கத்தோடு கொடுக்கப்பட்டதென மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்ப்புத் தொடர்பாக லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கர்நாடக சிறையில் அதிக பட்ச தண்டனையை வழங்கி, அவரை சிறைப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் மற்றும் ஜெயலலிதா ஜெயிலில் அடைபடவேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சியில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
தீர்ப்புக் கூறிய அன்றே பிணையில் வரக் கூடாது என திட்டமிட்டு 3 வருடத்தைக் காட்டிலும் 4 வருடம் என தீர்ப்பு வழங்கியள்ளார் நீதிபதி.
எந்த சட்டப் பிரிவுகளிலும் இவ்வாறு தண்டனை வழங்கப்பட வேண்டுமென கூறப்படவில்லை. நீதிபதி தனது கைப்பட தீர்ப்பபை நான்கு நாட்களாக எழுதினார் என்பதை யாரும் பார்க்கவில்லை.
இந்த தீர்ப்பில் அரசியல் கலந்துள்ளது. விரைவில் உலகத்திற்குத் தெரியவரும் என வழக்கறிஞர் தடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgv3.html
தமது கிழக்கு விஜயம் கண்காணிக்கப்பட்டது!- பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 01:17.18 PM GMT ]
தாம், அண்மையில் கிழக்குக்கு விஜயம் செய்தபோது கண்காணிப்புக்கு உள்ளானதாக பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் முறையிட்டுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இணையத்தில் லோரா டாவியஸ் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.
தமது விஜயத்தின்போது தம்மை சந்தித்த பலரும், தமது விஜயம் முடிந்தபின்னர் நேரடியாகவும் தொலைபேசியின் ஊடாகவும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
தமது விஜயத்தின்போது தாம் செய்தது பேசியது என்ன? போன்ற வியடங்கள் குறித்த மக்களிடம் கேட்கப்பட்டுள்ளன.
அழைப்பு ஒன்றின் அடிப்படையிலேயே தாம் கிழக்குக்கு விஜயம் செய்ததாக குறிப்பிட்டுள்ள லோரா தாம் மக்களுடன் சந்திப்புக்களை நடத்தியபோது படையினரால் படம் பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிலரிடம் தொலைபேசியின் மூலம் வந்திருக்கும் வெளிநாட்டவர் யார்? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தாம் சந்தித்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பயத்துடன் உள்ளனர். இது தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் எனினும் ஆச்சரியப்படவில்லை என்றும் லோரா குறிப்பிட்டுள்ளார்.
சில செய்தித்தாள்கள், தாம் கிழக்கு விஜயத்தின்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கான சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாக தகவல்களை வெளியிட்டதாகவும் லோரா கூறியுள்ளார்.
தாம் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளின் நிமித்தம் அங்கு செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ள லோரா, இலங்கையின் உள்நாட்டு விசாரணையும் நம்பகத்தன்மையுடன் இடம்பெறவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgv2.html

Geen opmerkingen:

Een reactie posten