தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

இந்திய மத்திய அரசு ஜெயலலிதாவை திட்டமிட்டு பழிவாங்கியதா?- விசேட அரசியல் ஆய்வு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
ஜெயலலிதாவின் கைது, அவரது பறிபோன முதல்வர் பதவி, இனி அவரது அரசியல் வாழ்க்கை, அடுத்து ஊழலில் மாட்டப்போவது யார்? போன்ற பல விடயங்கள் தொடர்பாக லங்காசிறி வானொலியில் விசேட அரசியல் ஆய்வு நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
மத்திய அரசாங்கம் ஜெயலலிதாவை திட்டமிட்டு இந்த வலையில் சிக்க வைத்து விட்டார்களா?

கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி, பாஜகாவால் தமிழகத்திற்குள் நுழைய முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தியிருந்தது.  அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜெயலலிதா தொடர்பான ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு  2 மணித்தியாலங்களுக்குப் பின்னர்தான் இந்திய ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளை வெளியிட்டனர்.

18 ஆண்டுகாலம் ஓடிக்கொண்டிருந்த வழக்கில் கடைசியாக தீர்ப்பு அறிவிக்க எடுத்த நேரம் சற்று வித்தியாசமாக உள்ளமை சிந்திக்க வேண்டியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு திட்டமிட்டு வழங்கப்பட்ட தீர்ப்பா? ஊழலுக்காக வழங்கப்பட்ட தீர்ப்பா? என பல விடயங்கள் இந்த நிகழ்ச்சியில் அலசி ஆராயப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVguz.html

Geen opmerkingen:

Een reactie posten