தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

லசந்த கொலை வழக்கு: சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு?
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 01:14.55 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு பொய்யான தகவல்கள் உள்ளடங்கிய கடிதமொன்றை அனுப்பி வைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 33 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் இன அழிப்பிற்கு இலக்கானதாகத் தெரிவித்து அதற்கான ஆதாரங்கள் உள்ளடங்கிய கடிதமொன்றை மாகாணசபை உறுப்பினர்கள் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை வலியுறுத்தும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுகோகொடை கங்கொடவத்த பங்கிரிவத்த வீதி இலக்கம் 42 என்னும் இலக்கத்தைச் சேர்ந்த பீ.ஜீ. ரவீந்திர நிசான் என்பவர் நேற்று இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தக் கடிதம் ஊடாக தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இதனால் குறித்த கடிதத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி இந்த கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அப்போதைய ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வட மாகாணசபையைச் சேர்ந்த 28 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபையைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற போதிலும் அது இன மத குரோதங்களை தூண்டக் கூடிய வகையில் பயன்படுத்தப்படக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைப் படையினர் போர் இடம்பெற்ற காலத்தில் அப்பாவி தமிழ் மக்களை கொன்றழித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வடக்கு கிழக்கில் தமிழர் பூர்வீகப் பகுதிகளின் சனத்தொகைப் பரம்பலை மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் இன அழிப்பிற்கு உள்ளானதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பிழையானது எனவும், போர் காலத்தில் 350,000 மக்களை படையினர் மீட்டனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே போலிக் குற்றச்சாட்டு சுமத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgr7.html


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் யோசனை!
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 01:37.56 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோசனைத்திட்டமாக முன்வைக்கப்பட உள்ளது.
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் நேற்று இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய விரும்பும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த யோசனைத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவே சோபித தேரரின் தலைமையில் கோட்டே நாக விஹாரையில் நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, லிபரல் கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து நடைபெற்ற கூட்டத்தில், பொது வேட்பாளராக மாதுலுவே சோபித தேரர் போட்டியிட வேண்டுமென கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgsy.html


இந்தியாவின் அனுசரணையில் மொழி ஆய்வுகூடம் திறந்து வைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 01:56.41 AM GMT ]
இலங்கையில் கல்வி வளர்ச்சிக்கு உதவும் முகமாக இந்தியா மொழி ஆய்வுகூடம் ஒன்றை கண்டியில் நேற்று திறந்து வைத்துள்ளது.
ஆங்கில அறிவை மேம்படுத்தும் முகமாகவே இந்த ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.
இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் மொழி ஆய்வுகூடத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே முதலாவது மொழி ஆய்வுகூடம் கம்பஹாவில் அமைக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
இதனைதவிர யாழ்ப்பாணம், பொலநறுவை, அம்பாறை, குருநாகல், இரத்தினபுரி, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலும் இவ்வாறான ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இந்தியா வருடந்தோறும் இலங்கை மாணவர்களுக்கு 790 புலமைப்பரிசில்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை சிறைக்கு செல்லும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 02:12.49 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையை பார்வையிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கடை சிறைச்சாலையின் நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் இவ்வாறு விஜயம் செய்யவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பெரேரா, எரான் விக்ரமரட்ன, ருவான் விஜேவர்தன, ஹர்ஸ டி சில்வா, நலீன் பண்டார, ஆர்.யோகராஜன், ரோசி சேனாநாயக்க, அசோக அபேசிங்க, நிரோசன் பெரேரா ஆகியோர் சிறைச்சாலைகளின் நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் நாளை வெலிக்கடைக்கு செல்லவுள்ளனர்.
சிறைச்சாலைகளில் நோய்கள் தொற்றக்கூடிய சாத்தியங்கள், கைதிகள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள், அடக்குமுறைகள், வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்கும் நோக்கில் இவ்வாறான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
ஏற்கனவே இவ்வாறு ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் மற்றும் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் போன்றனவற்றுக்கு சென்றிருந்த போது கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையிலும் எதிர்ப்புக்கள் எழக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.


http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgs1.html


லசந்த கொலை வழக்கு: சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 02:21.09 AM GMT ]
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கிஸ்ஸ நீதவான் ரங்கஜீவ விமலசேன, பொலிஸ் குற்ற விசாரணப் பிரிவினருக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி அத்திடிய என்னும் இடத்தில் வைத்து இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் லசந்த உயிரிழந்தார்.
லசந்த கொலையுடன் தொடர்புடைய வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
படுகொலைச் சம்பவம் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களை கைது செய்ய போதியளவு கால அவகாசம் வழங்குமாறும் குற்ற விசாரணைப் பிரிவினர் நீதவானிடம் கோரியுள்ளனர்.
இதன்படி, வழக்கு விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை 12ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgs2.html

Geen opmerkingen:

Een reactie posten