ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அரசாங்கத்துக்கெதிரான முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனக்கெதிராக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பாலித ரங்கே பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதேச சபைத் தலைவரை தாக்கியதாக பொய் வழக்குகளின் கீழ் தன்னைக் கைது செய்திருந்ததாக குறிப்பிட்டார்.
தான் ஒருபோதும் பிரதேச சபைத் தலைவரை தாக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று அதிகாலை தனது ஹோட்டல் மீது 29 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் அரசாங்கத்துக் கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgp7.html
Geen opmerkingen:
Een reactie posten