தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

யாராலும் புரியப்படாத ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் சார்ந்த புதிரான செயற்பாடுகள்!

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 04:51.09 PM GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமையை அடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோபாலபுரத்தி;ல் உள்ள கருணாநிதியின் வீட்டின் மீது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தினர் கல்லெறித்தாக்குதலை நடத்தினர்.
இதன்காரணமாக கருணாநிதியுடைய வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் நொருங்கின. இதன்போது திராவிட முன்னேற்றக்கழகத்தினருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் இடையில் மோதலும் இடம்பெற்றது.
இதில் திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து கருணாநிதியின் வீட்டுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டன.
இதன்போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பலத்த வாக்குவாதமும் ஏற்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVhp0.html

யாராலும் புரியப்படாத ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் சார்ந்த புதிரான செயற்பாடுகள்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 05:12.52 PM GMT ]
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குப் பற்றிய செய்தி இன்று வெளிவந்தவுடனேயே தமிழகமெங்கும் பெரும் பதட்டம் நிலவுவதுடன், பெரிய அளவிலான வன்முறைகளும் வெடித்துள்ளன.
இந்த சிறைத்தண்டனை மற்றும் ஜெயலலிதாவின் பின்னணி, ஈழத்தமிழர் விவகாரங்களில் அவரது பங்கு குறித்து கனடாவிலிருக்கும் சிரேஸ்ட ஆய்வாளர் சுதர்மா லங்காசிறி வானொலியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
2008ம் ஆண்டு முதல்வராக இணைந்த ஒரு ஆண்டிற்குள்ளேயே இந்திய மத்திய ஆட்சியையே புரட்டிப் போட்டவர்.  2014ம் ஆண்டுத் தேர்தலில் மூன்றாம் அணி வென்றிருந்தால் பிரதமராவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
18 வருடங்களிற்கு முன்னர் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் ஜெயலலிதாவைக் சிக்கலிற்குள் மாட்டிக் கொள்ளும் என்பதைத் தெரிந்திருந்தாலும், அவர் இந்த இறுதி விசாரணையின் போது விடுதலைப் புலிகளினால் தனக்கு அச்சுறுத்தல் உண்டு என்றது அவரை ஒரு பச்சை அரசியல்வாதியாகக்காட்டியது.
எம்.ஜி.ஆர் மறைந்த போது உடன்கட்டை ஏற முயன்றதான செய்தி, பின்னர் தனது வீட்டிற்கு அருகில் கடை வைத்திருந்த சசிகலாவை தனது இல்லத்தில் ஒருவராக ஆக்கி வாழ்ந்து வந்தது போன்ற சர்ச்சைகள் பல இருந்தாலும் நிறையப் படித்தவர், ஆளுமை மகிக்கவராக தன்னை பல இடங்களிலும் காட்டியிருக்கிறார் என்பது உள்ளிட்ட பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKVhp1.html

Geen opmerkingen:

Een reactie posten