தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

ஜெயலலிதாவின் தண்டனையை எதிர்த்து தமிழ் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்!

பண்டாரவளை வன்முறை! தென்மாகாண அமைச்சருக்கு அழைப்பாணை
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 11:55.18 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது பண்டாரவளையில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட தென் மாகாண சபை அமைச்சருக்கு பொலிசில் சரணடையும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையின் போது தென் மாகாண அமைச்சர் டீ.வி. உபுல் கையில் வாளை வைத்துக் கொண்டு காணப்பட்டார். மேலும் ஐ.தே.க. ஆதரவாளர்களை அச்சுறுத்தி, தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் பண்டாரவளையில் வன்முறைச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த பதுளை நீதவான், மாகாண அமைச்சர் டீ.வி. உபுல் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து மாகாண அமைச்சர் உபுல், நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரை பொலிஸ் நிலையத்தில் சரணடையுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான அரசியல்வாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgp1.html
ஜெயலலிதாவின் தண்டனையை எதிர்த்து தமிழ் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்!
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:08.47 PM GMT ]
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ் திரையுலக கூட்டமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ் திரைத்துறையினர் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் சினிமா படக்காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும், சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை திரையரங்குகளில் நான்கு காட்சிகளை ரத்து செய்வது என்றும், தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் நாளை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVgp2.html

Geen opmerkingen:

Een reactie posten