தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார முறைமையை ரத்து செய்ய முடியும்: பெட்டி வீரக்கோன் (செய்தித்துளிகள்)!

யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடியாது: நிர்மல கொதலாவல
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 01:36.26 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் சார்பில் யார் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என அமைச்சர் நிர்மல கொதலாவல தெரிவித்துள்ளார். 
நொண்டிச் சாக்கு சொல்லும் நோக்கிலேயே பொது வேட்பாளர் என்ற விடயம் பற்றி பேசப்படுகின்றது.
எந்த ஐயா அல்லது அம்மணி தேர்தலில் போட்டியிட்டாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவே வெற்றியீட்டுவார்.
வேட்பாளரின் பெயர், பிரபல்யம், ஆளுமை போன்ற காரணிகள் தேர்தலில் தாக்கத்தை செலுத்தும் என்பதனை மறுப்பதற்கில்லை. எனினும் வேட்பாளர் போட்டியிடும் கட்சிகளின் கொள்கைகள் அதனை விடவும் முக்கியமானது.
2005ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் இதனையே பறைசாற்றி நிற்கின்றது.
2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்தவுடன் போட்டியிட்ட வேட்பாளர் பொலிவுட் நடிகருக்கு உரிய பிரபல்யத்தை பெற்றிருந்தார்.
எனினும் மக்கள் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைகள் இன்று வரையில் மாற்றம் பெறவில்லை.
மக்கள் தெளிவான அரசியல் கொள்கை ஒன்றையே விரும்பி நிற்கின்றனர் என நிர்மல கொதலாவல சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhv6.html
தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார முறைமையை ரத்து செய்ய முடியும்: பெட்டி வீரக்கோன் (செய்தித்துளிகள்)
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 01:51.43 AM GMT ]
தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பெட்டி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவினை பெற்று பொது வேட்பாளராக போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட மாதுலுவே சோபித தேரர் முயற்சிக்கின்றார்.
எனினும், இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் சோபித தேரர் சிக்கலில் மாட்டிக்கொள்வார்.
தேர்தலில் வெற்றியீட்டினாலும் ஜனாதிபதி முறைமையை மாற்றியமைக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
சோபித தேரருக்கு அரசியல் அனுபவம் கிடையாது எனவே வேறும் நபர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.
ஜனாதிபதி தேர்தல் நடாத்தாமலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும். அரசியல் சாசனத்தில் அதற்கு இடமுண்டு.
நாடாளுமன்ற ஆட்சி முறைமை ஒன்றை நிறுவுவதன் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய முடியும்.
சட்டங்களை உருவாக்கும் மற்றும் சட்டங்களை மாற்றியமைக்கும் அதிகாரம் நீதிமன்றிற்கு காணப்படுகின்றது.
சட்டத் திருத்தங்களின் மூலம் ஜனாதிபதி முறைமையை ஜனாதிபதியின் பதவிக் காலம் உள்ளிட்டவற்றை மாற்றியமைக்க முடியும்.
ஜனாதிபதிக்கு தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு அவற்றை நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
எனவே நாடாளுமன்றின் ஊடாகவே திருத்தங்களை மேற்கொண்டு மாற்றங்களைச் செய்ய முடியும் என பெட்டி வீரக்கோன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஆறாம் திகதி அனுஸ்டிக்கப்பட உள்ள உலக ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகள் உரிய விதத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும்.
கல்விச் சேவையில் இடம்பெறும் பழிவாங்கல் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மலர்ச்செண்டு உள்ளிட்ட பரிசுப் பொருட்களினால் கௌரவப்படுத்துவதனை விடவும், ஆசிரியர்களும் அதிபர்களும் முதுகெலும்பை நிமிர்த்தி நிற்கக்கூடிய ஓர் முறைமை உருவாக்கப்பட வேண்டும்.
கல்வி அபிவிருத்தி என்று எதுவும் நடைபெறுவதில்லை.
சம்பள உயர்வு, சம்பள முரண்பாடு, ஆசிரியர் அதிபர் இடமாற்றங்கள் போன்றன குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை.
அரசாங்கம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய ஆர்வம் காட்டுவதில்லை என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhv7.html

Geen opmerkingen:

Een reactie posten