தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

இலங்கை தொடர்பில் ஐ.நாவின் விசாரணைகள் தொடர்கின்றன

ஊவா தேர்தல் தோல்வியின் எதிரொலி பதவி விலகத் தயார்: டிலான் பெரேரா (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 02:36.36 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகத் தயாரென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது ஆளும் கட்சி ஹாலியெல மற்றும் பதுளை தேர்தல் தொகுதிகளில் தோல்வியடைந்திருந்தது.
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்த இரண்டு பகுதிகளினதும் தொகுதி அமைப்பாளர்களாக கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சியை இவ்வாறான தேர்தல் தோல்விகள் குறிப்பதாகவும் இதனால் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று டிலான் பெரேராவிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதலளித்த அவர்,
தாம் தொகுதி அமைப்பாளர் பதவியை துறக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.  தேர்தல் தோல்விக்காக ஜனாதிபதி திட்டவில்லை.
தோல்வியடைந்த தொகுதிகளின் அமைப்பாளர்கள் பதவி விலக்கப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
தொகுதி அமைப்பாளர் பதவி இல்லாத காரணத்தினால் நான் கட்சியை விட்டு போக மாட்டேன்.
எவ்வளவு சேறு பூசினாலும் டிலான் பெரேராவை கீழே வீழ்த்த முடியாது.
வத்தளை பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சாராய போத்தல்கள், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளை மக்களுக்கு ஆற்றிய சேவையை மறக்கச் செய்துள்ளன என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு அவசரம்
ஊவாவில் இடம்பெற்ற தேர்தலில் பாரிய பின்னடைவுகளுடன் வெற்றிப்பெற்ற ஆளும் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கான தீவிர ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது.
சரிந்துவரும் செல்வாக்குக்கு மத்தியில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது அரசாங்கத்தின் எண்ணமாக உள்ளது.
அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும் சவால்களுக்கு மத்தியில் சஜித், ரவி கருணாநாயக்க தரப்பினரை சரி செய்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தநிலையில் ஆளும் கட்சி தரப்பின் தகவல்கள்படி எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதியளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படவுள்ளது.
இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தல் 2015 ஜனவரி 9ஆம் திகதி நடத்தப்பட வேண்டும்.
எனவே ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதில் மாற்றங்கள் ஏற்படுமா? என்பதை ஊகிக்கமுடியவில்லை என்று இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி வத்திக்கான் சென்று பாப்பரசரை சந்திக்கவிருப்பதும் என்ன காரணத்துக்காக என்பது இன்னும் சரியாக தெரியவில்லை என்று ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் ஒக்டோபர் 20 இல்! ஜனாதிபதித் தேர்தல் நவம்பரில்?
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இன்றைய சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயம் நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெற வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனால் வரவு செலவுத் திட்டம் முற்படுத்தப்படவுள்ளது.
வழமையில் நாட்டில் வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதத்திலேயே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது.
இம்முறை அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் ஒக்டோபர் 20 இல் முன்வைக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட முன்னர் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பையும் நடாத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhq3.html
ஐ.தே.கட்சியினருடன் பாப்பரசரை சந்திக்க செல்கிறார் மகிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 02:40.00 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரம் வத்திக்கானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் அவர், புனித பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்துக்கு முன்னர் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அங்கு செல்கிறார்.
பாப்பரசரின் இலங்கை விஜயம் எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறும் என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி ராஜபக்ச, பாப்பரசரை சந்திக்கும் திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் ஒக்டோபர் 2 அல்லது 3ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த விஜயத்தில் இணைந்துக் கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் அமரதுங்க மற்றும் ரோசி சேனாநாயக்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரும் தங்களுக்கான அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் தம்மை குறித்த விஜயத்துக்கு தெரிவு செய்த காரணம் தாம் கிறிஸ்தவர் என்பதற்காகவே இருக்கும் என்று கருதுவதாக ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhq4.html

இலங்கை தொடர்பில் ஐ.நாவின் விசாரணைகள் தொடர்கின்றன
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 02:55.33 AM GMT ]
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிளவுகள் ஏற்பட்ட போதும் தமது சர்வதேச விசாரணைகள் தொடரும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அந்த அலுவலகம் தமது விசாரணைகளின்போது கிடைத்துள்ள சாட்சியங்கங்களுக்கு உறுதிப்பாட்டை சேகரிக்கும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.
அத்துடன் விசாரணைகளின் ஒரு கட்டமாக அந்த அலுவலகம், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சமர்ப்பிப்பு ஆவணங்களை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை தமது விசாரணைகளுக்கு தற்போது சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அலுவலகம் கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்தது.
இதற்கிடையில் இலங்கை அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சாட்சி பாதுகாப்பு சட்டமூலத்தை கவனமாக பரிசீலிப்பதாக அலுவலகம் அறிவித்துள்ளது.
அதாவது குறித்த சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா? என்பதை தாம் பார்ப்பதாக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த சட்டமூலம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலம் கோடிட்டுள்ளது.
எனவே ஐக்கிய நாடுகளின் விசாரணைகளின் போது ஆவணங்களை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சாட்சி மற்றும் உறுதிப்பாடு என்பவற்றை சேகரிக்கும் பணிகள் அடுத்த மாதத்தில் நிறைவடையவுள்ளன.
இதனையடுத்து இறுதியறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் அடுத்த வருடம் மார்ச்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சவைக் கையாள்வது மேற்குலகத்திற்கு பெரிய விடயமல்ல: ச.வி.கிருபாகரன்
ஐ.நாவின் வாய்மூல அறிக்கை தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க சரியான பாதையை அமைக்கும்: ஹரி ஆனந்தசங்கரி
இலங்கை ஒரு இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது: பிரித்தானிய தமிழர் பேரவை
எமது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஆவணமாக வாய்மொழி மூல அறிக்கை உள்ளது: கஜேந்திரகுமார்
பாப்பரசரை பாவித்து ராஜபக்ச அரசியல் லாபம் அடையலாம்: அருட் தந்தை இமானுவேல்
ஐ. நா இலங்கை தொடர்பில் தாக்கல் செய்த அறிக்கை முன்னேற்றகரமானது:  பா. ம.க. சட்ட உறுப்பினர் கணேஸ்
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhq5.html

Geen opmerkingen:

Een reactie posten