கனடாவில் நடைபெறவுள்ள சர்வதேச சிறைச்சாலைகள் சம்மேளனமொன்றுக்கு விஜயம் செய்ய ஆயத்தமாகியிருந்த சிறைச்சாலை திணைக்களத்தின் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரும் படைத் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இலங்கைக்கான கனேடிய தூதரகம் வீசா வழங்க மறுத்துள்ளது.
கைத்தொழில் அபிவிருத்தி ஆணையாளர் திஸ்ஸ ஜயதிஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி எமில் ரஞ்சன் ஆகிய அதிகாரிகளுக்கே இவ்வாறு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறைச்சாலைகள் ஒன்றியத்தினால் வருடாந்தம் அபா என்னும் மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது.
இம்முறை இந்த மாநாடு கனடாவில் கடந்த 9ம் திகதி ஆரம்பமானது. மாநாடு ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்காக இலங்கையின் சார்பில் குறித்த இரண்டு அதிகாரிகளின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இலங்கை அரசாங்கம் போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் படையதிகாரிகளுக்கு வீசா வழங்க முடியாது எனவும் கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே சிறைச்சாலை திணைக்களத்தின் இரண்டு உயர் அதிகாரிகளினதும் வீசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Army-Canada