தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 september 2014

சஷீந்திரவுக்கு எதிராக செயற்படும் யோஷித ராஜபக்ஷ

ஹரின் பெர்ணான்டோ அரசாங்கத்தில் இணைந்து விடுவார்: ஐ.தே.கட்சியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 11:15.54 AM GMT ]
ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹரின் பெர்ணான்டோ எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து விடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கட்சியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் விஸ்வநாத ரணபதி குலதுங்க தெரிவித்துள்ளார்.
வார இதழ் ஒன்று வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொகுதியின் அமைப்பு பணிகளை ஒழுங்கு செய்யும் அமைப்பாளர்களுக்கு ஹரின் பெர்ணான்டோ எதனையும் செய்ய இடமளிப்பதில்லை.
இவ்வாறு துள்ளி குதித்து கொண்டிருக்கும் அவர் ஒரு நாள் அரசாங்கத்தில் இணைந்து விடுவார் என்பது தெளிவானது.
ஜனாதிபதி ஒரு முறை ஹரின் பெர்ணான்டோவை சந்தித்து சஜித் பிரேமதாச வந்தால் உங்களுக்கு பிரச்சினையில்லையா எனக் கேட்டுள்ளார். எனக்கு நீங்கள் இருக்கின்றீர்கள் தானே எனக்கு பிரச்சினையில்லை என ஹரின் ஜனாதிபதியிடம் கூறினார்.
அதிகமாக சத்தமிடும் நபர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
அவர்களின் செயற்பாடுகளால் எமக்கு அப்படி எண்ண தோன்றுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன அதிகளவில் பணத்தை செலவிட்டார்.
திடீரென இவர்கள் செலவிட பணம் எப்படி கிடைத்தது. இவர்களுக்கு இந்தளவு பணத்தை செலவிடும் திரணியில்லை. அரசாங்கத்தின் பணத்தையே இவர்கள் செலவிட்டனர்.
எந்த தேர்தலில் இல்லாத அளவுக்கு இவர்கள் பணத்தை செலவிட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தின் வாகனங்களை இவர்கள் வைத்திருப்பது எமக்கு மட்டுமல்ல மக்களுக்கு தெரியும் எனவும் குலதுங்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfp1.html
கிளிநொச்சியில் கொள்ளை குழு கைது
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 11:33.22 AM GMT ]
புனர்வாழ்வு பயிற்சிகளை பெறாத விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் வழிநடத்திய கொள்ளைக் குழுவைச் சேர்ந்த 5 பேரை கிளிநொச்சியில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட புலிகளின் உறுப்பினர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஏனைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், ஒரு முச்சக்கர வண்டி, சில தங்க ஆபரணங்களை கைப்பற்றியதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளைக் குழுவை வழி நடத்திய புனர்வாழ்வு பயிற்சியை பெறாத புலிகளின் உறுப்பினர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfp2.html
சஷீந்திரவுக்கு எதிராக செயற்படும் யோஷித ராஜபக்ஷ
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 11:40.41 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவின் வெற்றியை தடுக்க, அவருக்கு எதிராக பாரிய சேறுபூசும் பிரச்சாரங்களை முன்னெடுக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்து இருந்த போதிலும், இதற்கு எதிராக அரசாங்கத்தில் உள்ள சிலரே செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக சஷீந்திர ராஜபக்ஷவின் வெற்றியை தடுக்கும் நடவடிக்கை ஒன்று ராஜபக்ஷ குடும்பத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான தனியார் வானொலியில் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு ஆதரவான பிரச்சாரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தினமும் சஷீந்திர ராஜபக்ஷவின் கூட்டங்கள் தொடர்பான செய்திகள், உரைகள் அவரது ஊடகப் பிரிவினால், குறித்த வானொலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் அதனை ஒலி பரப்ப வேண்டாம் என அந்த வானொலியின் செய்தி பிரிவுக்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத் தவிர அரச ஊடகங்கள் மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள ஊடகங்களிடமும் சஷீந்திரவுக்கு சாதகமான செய்திகளை வெளியிட வேண்டாம் என அந்த குடும்பத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இதனை தவிர ராஜபக்ஷவினர் வெற்றி பெறுவதை விரும்பாத அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் சஷீந்திரவின் தேர்தல் பிரச்சாரங்களை தவிர்த்து வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfp3.html

காணாமல் போன நான்கு வயது சிறுமி கண்டுபிடிப்பு
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 11:43.32 AM GMT ]
குருணாகல் கனேவத்தையில் காணாமல் போன நான்கரை வயது சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த நான்கரை வயதான பமாரா கேஷனி பண்டார, கடந்த ஒன்பதாம் திகதி காணாமல் போயிருந்தார்.
தீவிரமாக இடம்பெற்ற தேடுதலில் குறித்த சிறுமி,  குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfp4.html

Geen opmerkingen:

Een reactie posten