தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 september 2014

அவசரமாக இலங்கை செல்லும் இந்திய புலனாய்வுக் குழு!!!

அரச நிகழ்வு என்ற பெயரில் தேர்தல் சட்டம் மீறல்: ஐ. தே. க. - ஊவாவிற்கு வறட்சி நிவாரணங்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 10:10.55 AM GMT ]
பதுளை மாவட்டத்தில் திடீர் திடீரென அரச நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அரசு தேல்தல் சட்டங்களை மீறுவதாக இன்று ஐ. தே. க. தேர்தல் செயற்பாட்டு பிரிவு தேர்தல் ஆணையாளருக்கு முறைபாடு செய்துள்ளது.
எதிர் வரும் 14ம், 15ம் திகதிகளில் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தை அழைத்து உதவி வழங்க அரசு ஏற்பாடு செய்திருப்பதை இக் கட்சி குறிப்பிட்டு இதை உடன் தடுத்து நிறுத்துமாறு ஆணையாளரை கேட்டுள்ளது.
ஊவா தேர்தல் சம்பந்தமாக 63 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும், இதன் அடிப்படையில்  42பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் கண்காணிப்பு பிரிவு கூறுகின்றது.
தேர்தல் தொடர்பான சகல பிரச்சாரங்களும் 17ம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வரவேண்டுமென்பது தேர்தல் சட்டமாகும்.
ஊவா மாகாணத்திற்கு வறட்சி நிவாரணங்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு
ஊவா மாகாணத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட மொனராகலை மாவட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கி வந்தது.
தேர்தல் பிரச்சார நோக்கில் நிவாரணம் வழங்கப்படுவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து தேர்தல் ஆணையாளர் இந்த நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்தார்.
எனினும் நிவாரணங்களை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிவாரணம் வழங்குதல் தேர்தல் விதி மீறல் என எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்திருந்தன.
தமக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென விவசாயிகள் தாக்கல் செய்த மனுவிற்கு அமைய வறட்சி நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfo7.html
தேர்தல் சட்டத்தை காப்பதில் பிரதான தடையாக இருப்பது ஜனாதிபதி: ஜே.வி.பி
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 10:28.25 AM GMT ]
தேர்தல் சட்டத்தை பாதுகாப்பதில் முதன்மையான தடையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பாடசாலை கட்டிடங்களை திறப்பதையும் ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரமாக பயன்படுத்தி வருகிறார். ஜனாதிபதிக்கு தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துகிறார்.
நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் சட்டத்தை காப்பது தொடர்பில் அவர் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.
நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த அவரே தலையிட வேண்டும். எனினும் பட்டப்பகலில் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறி வருகிறார்.
ஜனாதிபதியே இப்படி செயற்படும் போது சஷீந்திர ராஜபக்ச, அமைச்சர் விஜித்முனி சொய்சாவின் மகன் போன்றோர் எப்படி செயற்படுவார்?.
ஊவா மாகாண சபைத் தேர்தலை தனிமைப்படுத்தப்பட்ட தேர்தலாக கருதிவிட முடியாது. ஜனாதிபதி ராஜபக்ஷ தனது அடுத்த அதிகாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தேர்தலை மாற்றியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதமோ அல்லது மார்ச் மாதமோ நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
அதனை பரீட்சித்து பார்ப்பதற்காகவே ஊவா மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. வெற்றி தோல்வியை கணிக்கும் தேர்தலாக அவர் இதனை கருதுகிறார்.
இதனால், இதுவரை நடத்தப்பட்ட தேர்தல்களை விட இந்த மாகாண சபைத் தேர்தல் ராஜபக்ஷவினருக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.
ஏனைய மாகாண சபைகளுடன் எடுத்துக் கொண்டால், இந்த மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளர் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர் என்பது முக்கியமானது.
இதனால், இந்த தேர்தல் ராஜபக்ஷ ஆட்சிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை காட்டும் தேர்தலாக இது இருக்கும் என அரசாங்கம் அறிந்துள்ளது.
குறைந்த வசதிகளை கொண்ட கஷ்ட பிரதேசமாக இந்த மாகாணம் இருப்பது அரசாங்கம் எதிர்நோக்கும் மற்றுமொரு சவாலாகும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது: அனுரகுமார திஸாநாயக்க
நாடு மிக மோசமான நிலைமையை அடைந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகள் குடும்ப நல அரசியலே நாட்டை ஆட்சி செய்கின்றது. இந்த நிலைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
இந்த முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மக்கள் விரும்புகின்றமை ஓர் சிறந்த விடயமாகும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா அல்லது பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
ஜே.வி.பியுடன் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இணைந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது.
கட்சியை விட்டு விலகிச் சென்ற சூழ்ச்சிகாரர்களைத் தவிர்ந்த ஏனையவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfpy.html
அவசரமாக இலங்கை செல்லும் இந்திய புலனாய்வுக் குழு
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 11:02.24 AM GMT ]
இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்புக்காக இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்காக வேவு பார்த்ததாக சந்தேகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தே இந்த அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்திப்புக்கான அனுமதியை கோரும் கடிதமொன்றை அவர்கள் இலங்கை உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
ஹைதராபாத்தில் 'ஐஸ் இவென்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்திவந்த அருண் என்ற இலங்கைப் பிரஜையை சிலமாதகாலமாக தாம் கண்காணித்து வந்தனர் என்றும் அதன் பின்னரே அவரைக் கைதுசெய்தனர் என்றும் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfp0.html

Geen opmerkingen:

Een reactie posten