தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக முஸ்லிம் மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை: அஸ்வர்

சோனியா காந்தி விலகினால் காங்கிரஸ் 24 மணித்தியாலத்தில் உடைந்து போகும்- நட்வர்சிங்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:44.16 AM GMT ]
குடும்ப அரசியல் இந்திய அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல என்று தெரிவித்துள்ள, முன்னாள் அமைச்சர் நட்வர்சிங், சோனியா காந்தி பதவி விலகினால் காங்கிரஸ் 24 மணித்தியாலங்களுக்குள் உடைந்து போய்விடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் குடும்ப அரசியல் பரவியுள்ளது.
பஞ்சாப்பில் பாடல்ஸ் உத்தரபிரதேஸில் முலாயம்சிங் யாதவ் குடும்பம்ää தென்னகத்தில் கருணாநிதியின் குடும்பம் என்ற இந்த குடும்ப ஆட்சி நிலவியது.
இது இறுதியில் ஆரோக்கியமான விடயம் அல்ல என்று நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார்.
தமது வன் லைப் இஸ் நொட் இன்னப் என்ற நூல் வெளியீட்டின்போது இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் தற்போது நாடாளுமன்றத்தில் 44 ஆசனங்களை கொண்டிருக்கிறது.
சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ கட்சியில் இருந்து விலகிக்கொண்டால் 4 ஆசனங்களை கூட காங்கிரஸினால் தக்கவைக்கமுடியாது.
ஏனெனில் அந்தக்கட்சியின் தலைவர்களுக்கு மத்தியில் இணக்கங்கள் இல்லை என்று நட்வார் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை,  வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் 95 வீதமானோர் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
எனினும் இந்தியாவில் இது 70 வீதமாகவே உள்ளது என்று நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUipz.html
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாக முஸ்லிம் மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை: அஸ்வர்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:43.52 AM GMT ]
உலகிலேயே மிக அமைதியாகவும் சந்தோசமாகவும் முஸ்லிம்கள் வாழும் ஒரே நாடு இலங்கையே என பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர்  குறிப்பிட்டார்.
மொனராகலையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாகிய பின்புதான் முஸ்லிம் மக்கள் உரிமையுடன் வாழ்கின்றனர்.
எனவே அவரின் அரசை பாதுகாப்பது நமது கடமை என்றார்.
மேலும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர். அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றன.
அமெரிக்கா. பிரிட்டன். நோர்வே என்று எந்த வல்லரசுகள் எதிர்த்தாலும் முஸ்லிம் தலைவர்கள் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களிக்கின்றார்கள்.
இலங்கையில் முஸ்லிம்கள் ஏனைய நாடுகளை விட சிறப்பாக வாழ்கின்றார்கள் என்பது உலக முஸ்லிம் தலைவர்களுக்குத் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு பள்ளிவாசல்கள் கட்டப்படுவதினால் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும் எவரும் மறைக்க முடியாது அவை செய்மதி மூலம் முழு உலகிற்கும் செல்கிறது.
இதனை மனதிற்கொண்டு முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டும். போஷிக்க வேண்டும். ஆதரவு வழங்க வேண்டும். சிறு சிறு சம்பவங்கள் நடக்கலாம். எனினும் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அஸ்வர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUipy.html

Geen opmerkingen:

Een reactie posten