[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:11.23 AM GMT ]
வடமாகாண முதலமைச்சருக்கு மட்டுமல்ல அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களுக்கும் மாகாண செயலாளர்களுக்கும் தலைவர்களுக்கும் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியா சென்று பேச்சு நடத்த வேண்டுமானால் அரசாங்கத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் ஆளுநரின் அனுமதி பெறவேண்டியது அவசியம் என அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வலவும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது குறித்து கேட்டபோதே அமைச்சர் வாசுதேவ இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்நாட்டு அரசுத் தலைவர்களுடன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எவ்விதமான தடையும் இல்லை. இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்கும் விஜயத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தலாம்.
அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களை கோருவதற்கும் முடியும். அதற்கு எந்தவிதத்திலும் தடையில்லை. அத்தோடு மத்திய அரசாங்கத்தின் அனுமதியை கேட்க வேண்டிய அவசியமுமில்லை.
வடமாகாண முதலமைச்சருக்கு மட்டுமல்ல அனைத்து மாகாண சபை முதலமைச்சருக்கும் மாகாண செயலாளருக்கும் தலைவருக்கும் இவ்வாறு வெளிநாடு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கப்படவில்லை. இலங்கையின் அரசியலமைப்பிலும் இதற்கு தடைகள் இல்லை.
ஆனால், வடமாகாணத்தின் பிரச்சினைகளின் தீர்வுகள் தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விரும்பினால் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரச பிரதிநிதியொருவரையும் தன்னுடன் கூட்டிச்செல்வதே நன்மைபயக்கும்.
ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியது அத்தியாவசியமாகும். இப்பிரச்சினையோடு இலங்கை, இந்தியா மற்றும் தமிழ் தரப்பென மூன்றும் பின்னிப்பிணைந்துள்ளன. இதனை தனித்தனியாக பிரிக்க முடியாது. என்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கர.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUio4.html
பொன்சேகா சாட்சியமளித்தால் கடும் நடவடிக்கை: அரசு
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:17.25 AM GMT ]
இவ்வாறு ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
ஐ.நா குழு விசாரணை ஒரு நம்பிக்கையற்ற விசாரணை, அவர்கள் நாட்டிற்குள் வர அனுமதியோம், ஐ.நா விசாரணைக்குழு பக்க சார்பானது என்பதால் அரசின் ஆணைப்படி சாட்சியமளிக்கப்பட்டவரை தண்டிக்க எமது அரசு ஆராய்ந்து வருகின்றது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUio5.html
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27வது கூட்டம் திங்கள் ஆரம்பம்!
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 05:20.58 AM GMT ]
மேலும் இந்த 27 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாகவும் பல நாடுகளின் பூகோள கால மீளாய்வு நிலைமைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது. விசேடமாக ஈராக்கிலும் சிரியாவிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை குழுவின் ஏற்பாட்டாளர் சன்ட்ரா பெய்டா அல்லது புதிய மனித உரிமை ஆணையாளர் இந்த வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார்.
கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் புதிய ஆணையாளர் செயித் அல் ஹுசைன் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார்.
அந்த உரையின்போது இலங்கை விவகாரம் குறித்தும் புதிய மனித உரிமை ஆணையாளர் பிரஸ்தாபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கையின் சார்பில் இந்தக் கூட்டத் தொடரில் அதிகாரிகள் மட்ட தூதுக்குழுவே கலந்துகொள்ளவுள்ளது. அமைச்சர்கள் மட்ட தூதுக்குழு இம்முறை கலந்துகொள்ளவில்லை.
அந்த வகையில் ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதுக்குழு 27வது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளது.
அத்துடன் சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்து இரண்டு உயர் அதிகாரிகள் ஜெனிவாவுக்கான தூதுக்குழுவில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமையவே முன்னாள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையினால் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவில் 12 பேர் உள்ளடங்குகின்ற நிலையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUio6.html
Geen opmerkingen:
Een reactie posten