பலரும் அமெரிக்கா - இலங்கை நாடுகளுக்கு இடையே முறுகல் தோன்றியுள்ளதாக நினைத்துள்ளார்கள். மேலும் சிலர் அமெரிக்கா தமக்கு உதவும் என்றும் இன்னமும் நம்புகிறார்கள். அதிலும் சிலர் அமெரிக்கா இல்லாமல் தீர்வு இல்லை என்று எல்லாம் கருத்துச் சொல்கிறார்கள். ஆனால் வன்னியில் கிளிநொச்சி படைமுகாமில் அமெரிக்க இராணுவத்தினர் சிங்கள படைகளுக்கு, பல்வேறுபட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. குண்டுகளை மோப்பம் பிடித்து கண்டறியும் நாய்கள் தொடர்பாகவும், அவசர நிலையை சமாளிப்பது தொடர்பாகவும், திடீரென ஒரு தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாகவும் பல பயிற்சிகள் சிங்கள இராணுவத்திற்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு இனப் படுகொலை புரிந்த இராணுவத்திற்கு இவ்வாறான உதவிகளை அமெரிக்கா ஏன் செய்யவேண்டும் ? ஒரு புறத்தில் ஐ.நாவில் பிரேரணை மறு முனையில் அதே இராணுவத்திற்கு பயிற்சி ? என்ன தான் நடக்கிறது ? தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவதில் அமெரிக்கா ஜகஜாலக் கில்லாடி என்று அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இதனை இங்கே பார்கக்கூடியதாகவும் உள்ளது.
புகைப்பட உதவி: இனியொரு.காம்
http://www.athirvu.com/newsdetail/966.html
Geen opmerkingen:
Een reactie posten