தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

யாழில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த ஈபிடிபியின் ஆதரவாளர்: நையப்புடைத்த மக்கள்!

ரவி கருணாநாயக்க - ராஜ் ராஜரட்ணம் தொலைபேசி உரையாடல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 04:14.40 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அமெரிக்காவில் நிதி மோசடியில் ஈடுபட்ட ராஜ் ராஜரட்ணத்துடன் தொலைபேசியில் உரையாடியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக விசாரிக்கப்படும் அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக வழக்கு விசாரணை இன்று மேல் நீதிமன்றில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் மேலதிக அந்நிய செலாவணி கட்டுப்பாட்டாளர் சிசிரகுமார பெரேரா இன்று நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
பிரதிவாதியான ரவி கருணாநாயக்க குறித்த பண பறிமாற்றம் தொடர்பாகவும், அதன் செயற்பாடு தொடர்பாகவும் ராஜ் ராஜரட்ணத்துடன் தொலைபேசியில் கலந்துரையாடியிருப்பதாக அந்த சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை. குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜ் ராஜரட்ணமும் கலன் இன்டர்நஷனல் மாஸ்டர் பஃண்ட் நிறுவனமும் அனுப்பிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கியின் அனுமதியின்றி, அவர்களின் சார்பில் ஸ்ரான்டர்ட் சார்ட்டட் வங்கியின் கிருளப்பனை கிளையில் வைப்பில் இடுவதற்கு ரெக்ஷியா கோன்ப்ரேட் நிறுவனத்திற்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்ததாக ரவி கருணாநாயக்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhvz.html
யாழில் பெண்ணொருவரை வீடியோ எடுத்த ஈபிடிபியின் ஆதரவாளர்: நையப்புடைத்த மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 04:40.15 PM GMT ]
யாழ். நகரப் பகுதியிலிருந்து பேருந்தில் பயணித்த பெண்ணின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயரின் சாரதியும், ஈ.பி.டி.பி ஆதரவாளருமான இளைஞரை பொது மக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்த சம்பவம் இன்று யாழ்.நகரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.நகரப் பகுதியிலிருந்து குடாநாட்டின் மற்றொரு பகுதிக்குப் பயணமான பேருந்தில் குறித்த நபரும் சென்றுள்ளார்.
இந்நிலையில் அதே பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் அந்தரங்கங்களை குறித்த நபர் கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதை இளைஞர் ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, எதற்காக இவ்வாறு நடந்துகொள்கின்றீர்? என கேட்டதற்கு, இந்த நபர் தான் அமைச்சரின் ஆள் எனவும், தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை எனவும் கூறியதுடன், பேருந்திலிருந்து இறங்கி ஓட முற்பட்டுள்ளார்.
இதன்போது நகரப் பகுதியிலிருந்த இளைஞர்கள் சிலர் குறித்த நபர் ஓடுவதைக் கண்டு துரத்திப்பிடித்து எதற்காக ஓடினாய் என விசாரித்தபோது பேருந்தில் இவரின் சேஷ்டைகளை அவதானித்த இளைஞரும் அந்த இடத்திற்கு வந்து விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அமைச்சரின் ஆளுக்கு நகரப் பகுதியில் வைத்து பொதுமக்கள் நையப்புடைத்துள்ளனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் வந்து குறித்த நபரின் கைத்தொலைபேசியை பார்த்த பொழுது பல பெண்களின் அந்தரங்கங்களை இவர் வீடியோ எடுத்து வைத்திருந்தமை அம்பலப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.
மேலும் இதே நபர் அண்மையில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி மின்கம்பத்தில் மோதி விபத்து நடந்தமை, அதனையடுத்து இவர் வாகனத்தை ஓட்டவில்லை என முன்னாள் மாநகர முதல்வர் பொலிஸாருக்கு பொய் கூறியிருந்தார்.
எனினும் விசாரணை செய்த பொலிஸார் இவரே வாகனத்தை ஓட்டினார் என கண்டுபிடித்து நீதிமன்றில் குறித்த நபரை ஆஜர் செய்திருந்தனர்.
இதேவேளை குறித்த நபர் ஈ.பி.டி.பி தீவிர ஆதரவாளர் என்பதுடன், யாழ்.மாநகர முதல்வரின் சாரதியாகவும் அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னர் அவருடைய பணிப்பின் பெயரில் தற்பொழுது யாழ்.மாநகர ஆணையாளரின் சாரதியாகவும் இருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhv0.html

Geen opmerkingen:

Een reactie posten