[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 04:55.45 PM GMT ]
அரசாங்கம், இந்த பயிற்சிகளை பலாத்காரமாக மாணவர்கள் மத்தியில் திணிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த பயிற்சிகள் இராணுவ பயிற்சிகளை ஒத்ததாக அமைந்துள்ளன. இது மிகவும் பாதிப்பான செயல் என்று மாணவர்கள் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இராணுவ பயிற்சிகள் அரசியலை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுவதாக ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பல்கலைக் கழகங்களுக்கான புதிய மாணவர்களுக்கு ஆங்கில மற்றும் கணணி கற்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரங்களிலேயே இந்த பயி;ற்சிகள் வழங்கப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் பலர் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhv1.html
பாராளுமன்றில் நாளை முக்கிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 05:09.30 PM GMT ]
இலங்கை பாராளுமன்றில் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டம் நாளைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐநா மனித உரிமைகள் அமர்வின்போது, ஐநாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இன்று அமுல்படுத்தப்பட உள்ளதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
எனினும், அரச தரப்பு தகவல்கள் நாளையே குறித்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றன.
இலங்கையில் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என சர்வதேச அமைப்புக்களும், மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
சாட்சியாளர்களும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களும் ஒடுக்கப்படுவதனை தடுக்கும் நோக்கிலேயே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்ட மூலத்திற்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி அமைச்சர்கள் கையழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தை தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணையாக ஐக்கிய தேசியக் கட்சியின் கரு ஜயசூரிய, விஜயதாச ராஜபக்ஸ போன்றவர்கள் கடந்த காலங்களில் சமர்ப்பித்த போதிலும் அவற்றை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhv2.html
சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ம் திகதி இலங்கைக்கு விஜயம்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 05:20.33 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின்பேரில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதாகவும் இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு சீனாவுக்கு விஜயம் செய்திருந்தபோது ராஜபக்ச, சீன ஜனாதிபதிக்கான அழைப்பை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின்போது பல இருதரப்பு உடன்படிக்கைகளை கைச்சாத்திடப்படவுள்ளன.
ஸி ஜிங்பிங்கின் இலங்கை விஜயமானது, இலங்கைக்கு சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் 28 வருடங்களுக்கு பின்னரான விஜயமாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhv3.html
சஷீந்திரவிற்கு ஆதரவாக கோத்தபாய! சூடுபிடிக்கும் ஊவா மாகாண சபைத்தேர்தல்!
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 06:59.21 PM GMT ]
நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி பலத்த பின்னடைவைச் சந்திக்கும் என்று தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஜெனீவா - ஐ.நா மனித உரிமைச்பையின் 27வது கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், மனித உரிமை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகளெனும் தொனிப்பொருளிலான உபமாநாட்டினை, இலங்கை தவிர்த்துக்கொண்டுள்ளது.
இதனைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, வாக்காளர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.
மறுபுறத்தில் அரசாங்கத்தின் சகல அமைச்சுகளையும் ஒருங்கிணைத்து ஊவா மாகாணத்தில் விசேட நலன்புரித்திட்டங்கள், அபிவிருத்திகள், நிவாரணத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆளாளுக்கு ஒருங்கிணைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது மூத்த சகோதரன் மகனும், முன்னாள் முதலமைச்சருமான சஷீந்திர ராஜபக்ஷவை தோல்வியிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் களமிறங்கியுள்ளார்.
இதற்காக இராணுவத்தின் இசைக்குழுவைப் பயன்படுத்திக் கொண்டுள்ள அவர், மொனராகலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
கடந்த வாரம் இதே இராணுவ இசைக்குழுவினர் நாவலப்பிட்டியவில் இசைநிகழ்ச்சி நடத்தியபோது பெருந்தொகைப் பணம் நுழைவுக் கட்டணமாக அறவிடப்பட்டது. எனினும் மொனராகலையில் முற்றுமுழுதாக இலவச இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இதற்கென 2000 ராணுவத்தினர் மொனராகலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் பொதுமக்களுக்கான நீர்வழங்கலும் தடைப்பட்டிருந்த்தாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே தேர்தல் தினத்தில் இராணுவத்தினரைக் கொண்டு வன்முறைச் சம்பவங்களை ஏற்படுத்தி கள்ள வாக்குப் போடும் திட்டமொன்றை பாதுகாப்பு அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhv4.html
யுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட்டினை தவிர்த்த இலங்கை!
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 08:37.49 PM GMT ]
பெண்களின் உரிமைகள் தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் சிறப்பு பிரதிநிதி பங்கெடுத்திருந்த இந்த உபமாநாட்டில், மோதல் காலங்களிலும் மோதலுக்கு பின்னரான காலத்திலும், பெண்கள் எதிர்கொள்கின்ற பாலியல் வன்முறைகளை தடுப்பது குறித்தும், இதற்கான பரிகாரநீதி குறித்தும் இந்த உபமாநாட்டில் கருத்தாடப்பட்டிருந்தது.
அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பிறேசில், இத்தாலி உட்பட பல ஆபிரிக்க, ஆசிய நாடுகள் பங்கெடுத்திருந்த போதிலும் இந்த உபமாநாட்டிற்கு இலங்கை சமூகமளிக்கவில்லை.
இலங்கைத்தீவில் இடம்பெற்றிருந்த போரின் போது, தமிழ்பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்முறைகள், போருக்கு பிந்திய சமாகாலத்தில் கணவனை இழந்த மற்றும் ஆண்துணையற்ற பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் எதிர்கொள்கின்ற பாலியல் அச்சுறுத்தல்கள் ஆகிய தொடர்பில் சிறிலங்கா படையினர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாக சியறா லியோனில் இடம்பெற்றிந்த போரின் போது, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைச்சபையின் பெண்கள் உரிமைகள் விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதியின் விசாரணை அறிக்கை, இந்த உபமாநாட்டில் முக்கியவும் பெற்றிருந்தது.
போர்ச்சூழலில் பெண்கள் மீது இடம்பெறுகின்ற பாலியல் வன்முறைகள் போர்குற்றங்களாகவும், மானிடத்துக்கு எதிரான குற்றங்களாகவும் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கை இவ் உபமாநாட்டினை தவிர்த்து பங்கேற்கவில்லை.
இலங்கையில் யுத்தத்தின் விளைவாக சுமார் 90,000 தமிழ் கைம்பெண்கள் வாழ்ந்து வருவதோடு, பாலியல் வன்முறைகள் அச்சுறுத்தல் என பெண்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு வகையிலான மனித உரிமைமீறல்களில் இருந்து பெண்களின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த 'பாதுகாப்புப் பொறிமுறை' ஒன்றை உடனடியாக உருவாக்கி செயற்படவைக்க ஆவன செய்யுமாறும் நா.தஅரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் சர்வதேச விதவைகள் நாளில் அனைத்துலக சமூகத்திடம் கோரிநின்றிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhv5.html
Geen opmerkingen:
Een reactie posten