தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 september 2014

இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்க நடவடிக்கை: இந்தியா

ஆபத்தான பாலம்: பல ஆண்டுகளாக அவதிப்படும் கிளிநொச்சி ஊற்றுப்புலம் மக்கள்
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 04:08.47 AM GMT ]
கிளிநொச்சியின் பழம்பெரும் கிராமங்களில் ஒன்றான ஊற்றுப் புலம் கிராமத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
1977 மற்றும் 1983ம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் தமிழர் மீதான வன்முறைகளால் அகதிகள் ஆக்கப்பட்டு வடக்கிற்கு துரத்தப்பட்டவர்களில் கணிசமான மக்களும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மக்களும் குடியேறி கடந்த 35 வருடங்களாக கிளிநொச்சியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றும் பல்வேறு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையிலான குழுவினரிடம் அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அப்பகுதிக்கு பிரதே சபை உறுப்பினர் சி.சுப்பையா, பாலாசிங்கசேதுபதி, பா.உறுப்பினரின் செயலாளரும் கட்சியின் மாவட்ட கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன், இளைஞர் அணியின் செயலாளர் சர்வானந்தா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினருடன் விஜயம் செய்திருந்தனர்.
இந்தக்கலந்துரையாடலில், ஊற்றுப்புலம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் யோகன், ஊற்றுப்புலம் கிராமத்தின் மூத்த குடிமகனும் முன்னாள் கி.அபிவிருத்தி சங்க தலைவருமான சி.சின்னையா, கட்சியின் ஊற்றுப்புலம் செயற்பட்டாளர் வடிவேல் முதியோர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்கள் வெளியிட்டனர்.
அதன்படி ஊற்றுப்புலம் கிரராமத்தின் பின்புறமாக கிருஸ்ணபுரம், மலையாளபுரம் போன்ற கிராமங்களையும் இணைக்கும் எல்லைப் பகுதியாக இருக்கக்கூடியதும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கும் பிரதான பாதையாகவும் இருக்கக்கூடிய பகுதியில் மிகவும் ஆபத்தான பாலம் ஒன்று மக்களின் ஆபத்தான பாவனையில் காணப்படுகின்றது.
பாடசாலை சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினர் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு தடவை உரிய அதிகாரிகள் தரப்புக்களிடம் முறையிட்டபோதும் பலகாலமாக இந்த நிலையிலேயே பயணிக்க வேண்டியிருப்பதாகவும் மழைகாலத்தில் ஆறு பெருக்கெடுத்தும்போது இந்த பாலம் இன்னும் மிகவும் ஆபத்தானது என ஊற்றுப்புலம் பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUer0.html
இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்க நடவடிக்கை: இந்தியா
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 05:09.14 AM GMT ]
இலங்கை அகதி கோரிக்கையாளர்கள் ஆந்திர மாநிலத்தைப் பயன்படுத்தி படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திரப் பிரதேச பிரதி முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான சினராஜப்பா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் பிரகாசம் என்னும் கரையோரப் பரப்பை பயன்படுத்தி இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சிக்கின்றனர்.
இதனை தடுப்பதற்கு அதிகளவான கரையோர பொலிஸ் நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்,கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையிலிருந்து அகதிக் கோரிக்கையாளர்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்தியாவிலிருந்தே அதிகளவான இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தென் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற 157 இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் காரணமாக பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUer1.html

ஹோட்டல்களில் தங்குவோரின் விபரங்களை திரட்டும் புலனாய்வுப் பிரிவினர்?
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 02:01.24 AM GMT ]
ஹோட்டல்களில் தங்குவோரின் விபரங்களை புலனாய்வுப் பிரிவினர் திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
ஹோட்டல்கள், விடுதிகளில் தங்கியிருக்கும் உள்நாட்டுப் பிரஜைகளின் பெயர் விபரங்கள், முகவரிகள், தங்கியிருந்த நாட்களின் எண்ணிக்கை, தங்கிய தினம் போன்ற விபரங்களை பொலிஸார் திரட்டி வருகின்றனர்.
மனைவி, பிள்ளைகளுடன் ஹோட்டல்களில் தங்கியிருப்போர் பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் ஹோட்டல் மற்றும் விடுதி நிர்வாகங்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த தகவல்கள் நாள்தோறும் பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த தகவல்கள் மாவட்ட புலனாய்வுப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
அந்த தகவல்களை தேசிய புலனாய்வுப் பிரிவினர் திரட்டுகின்றனர்.
எனினும், இவ்வாறு தகவல்கள் திரட்டப்படுவதனால் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டு வருவதாக ஹோட்டல் விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாடிக்கையாளர்களின் வரவு குறைவடையக் கூடிய அபாயம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUeq6.html

Geen opmerkingen:

Een reactie posten