தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 september 2014

யாழில் பொதுமக்கள் மத்தியில் நடந்த கொடூரம்- மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை விபத்தில் நால்வர் காயம்!

தெல்லிப்பழையில் பொதுமக்கள் மத்தியில் இரண்டு பேரை துரத்தித் துரத்தி வாளால் வெட்டிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மக்கள் பலர் பார்த்திருக்க இருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் எனக் இதனைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலரும் பார்த்திருக்கக் கூடியதாக வீதியில் நின்ற இருவரை துரத்தி துரத்தி வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர் எனக் கூறப்படுகின்றது.
இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவர் குப்பிளான் பகுதியிலுள்ள உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுபவர் என அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
எனினும் இத்தாக்குதல் சம்பவம் நடந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.
இதேவேளை, காயமடைந்த இருவரும் சுயநினைவை இழந்திருப்பதால் பெயர், விபரங்கள் வைத்தியசாலையில் பதியப்படவில்லையென தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை விபத்தில் நால்வர் காயம்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முடித்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த சாரதி உட்பட 04 பேர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவிலிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்றும் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொக்கட்டிச்சோலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களில் 03 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் கூறினர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUerz.html

Geen opmerkingen:

Een reactie posten