[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 05:20.48 AM GMT ]
குறித்த இளைஞர் கடந்த 13 ஆம் திகதி விடுதியில் தங்கியுள்ளதுடன் நேற்று விடுதியின் ஊழியர்கள் அவர் அறையில் இருக்கின்றாரா இல்லையா என்பதை அறிய அறை கதவை திறந்து பார்த்த போது அவர் கட்டிலில் விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.
இது குறித்து தம்புள்ளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் இளைஞர், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இளைஞர் தங்கியிருந்த அறையில் கிருமி நாசனி போத்தல் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மெதிரிகிரிய மஹாஅம்பகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUer2.html
போதிராஜ மாவத்தையில் பதற்ற நிலைமை
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 05:35.28 AM GMT ]
நடைபாதை வியாபாரிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக இந்த பதற்ற நிலைமை நிலவி வருகின்றது.
அண்மையில் குணசிங்கபுரத்தில் கடைகள் உடைக்கப்பட்டு புதிய கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டன.
இந்தப் பகுதியில் கடைகள் வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என நடைபாதை வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடைகள் வழங்குவதாகத் தெரிவித்து புறக்கோட்டையில் காணப்பட்ட கடைகள் உடைக்கப்பட்டதாகவும் இதுவரையில் கடைகள் வழங்கப்படவில்லை எனவும் நடைபாதை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUer3.html
கீரிமலையில் உறுதியுள்ள தமிழ் மக்கள் காணிகள் அபகரிப்பு!
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 05:41.28 AM GMT ]
கொழும்பில் இருந்து சென்ற உயர் அதிகாரிகளினால் காணி அளவீட்டு பணிகள் இன்று (திங்கட் கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலிவடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் நான்கு முறை மேற்கொள்ளப்பட்ட காணி அளவீட்டு பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது.
எனினும் அதிகாரிகள் இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தற்போழுது அளவீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையை தடுக்க பொது மக்களின் ஆதரவுகளை அளிக்குமாறு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUer4.html
Geen opmerkingen:
Een reactie posten