[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 02:14.27 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டால் வழக்குத் தொடரப் போவதாக சரத் என் சில்வா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் ஆளும் கட்சிக்கு ஆதரவான சிரேஸ்ட சட்டத்தரணிகள், சரத் என் சில்வாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த விடயம் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக குறித்த சட்டத்தரணிகள் குழுவின் உறுப்பினர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தரணிகள் குழுவில் கொழும்பு சட்ட பீட பேராசிரியர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர்.
18ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதனால், மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியாது என சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே இனி வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மற்றுமொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUeq7.html
ஹோட்டல்களில் தங்குவோரின் விபரங்களை திரட்டும் புலனாய்வுப் பிரிவினர்?
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 02:01.24 AM GMT ]
ஹோட்டல்கள், விடுதிகளில் தங்கியிருக்கும் உள்நாட்டுப் பிரஜைகளின் பெயர் விபரங்கள், முகவரிகள், தங்கியிருந்த நாட்களின் எண்ணிக்கை, தங்கிய தினம் போன்ற விபரங்களை பொலிஸார் திரட்டி வருகின்றனர்.
மனைவி, பிள்ளைகளுடன் ஹோட்டல்களில் தங்கியிருப்போர் பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் ஹோட்டல் மற்றும் விடுதி நிர்வாகங்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த தகவல்கள் நாள்தோறும் பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த தகவல்கள் மாவட்ட புலனாய்வுப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
அந்த தகவல்களை தேசிய புலனாய்வுப் பிரிவினர் திரட்டுகின்றனர்.
எனினும், இவ்வாறு தகவல்கள் திரட்டப்படுவதனால் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டு வருவதாக ஹோட்டல் விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாடிக்கையாளர்களின் வரவு குறைவடையக் கூடிய அபாயம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUeq6.html
Geen opmerkingen:
Een reactie posten