தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 september 2014

பாகிஸ்தானின் உளவு நடவடிக்கையானது தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: கருணாநிதி

மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கு அரசாங்கத்திற்கு அவசியமில்லை: ரணில் (செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 01:53.46 AM GMT ]
மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வினை குறைக்கவோ கட்டுப்படுத்தவோ அரசாங்கத்திற்கு எவ்வித அவசியமும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபை தேர்தல்களின் பின்னர் பொருட்களுக்கான விலைகளை உயர்த்துவதனை அரசாங்கம் வழமையாக்கிக்கொண்டுள்ளது.
மத்திய, வடமத்திய, தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னரும் வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளது.
மக்களின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை. எனினும் பொருட்கள் சேவைகளுக்கான செலவுகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளது.
தேர்தலில் தோல்வியைத் தழுவக்கூடும் என்ற அச்சத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் அரசாங்கம் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்திற்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்படுவதற்கு எதிராக பெப்ரல் வழக்கு
மொனராகலை மாவட்ட மக்களுக்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.
இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஊவா மாகாண மக்களுக்கு மட்டும் வறட்சி நிவாரண உதவிகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என பெப்ரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமாயின் ஏனைய பிரதேசங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
மொனராகலை மாவட்டத்தின் அனைத்து மக்களும் வறட்சியினால் பாதிக்கப்படவில்லை எனவும் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட மக்களுக்கு வறட்சி நிவாரணங்களை வழங்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
எனினும் உச்ச நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய மீண்டும் நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தினேஷ் குணவர்தன மக்களுக்கு சேவை செய்வதில்லை: மகரகம நகர சபை தலைவி
மகரகம மக்கள் தமது வாக்குகளினால் அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமல் சேனாதிலங்கார ஆகியோரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய போதிலும் அவர்கள் மக்களுக்கு எந்த சேவைகளையும் செய்யவில்லை மகரகம நகர சபையின் தலைவியான காந்தி கொடிக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால், மகரகமவின் அபிவிருத்தி தனது கணவரான மேல் மாகாண அமைச்சர் உபாலி கொடிக்காரவின் தோலில் சுமத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகரகமவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தினேஷ் குணவர்தனவையும் அமல் சேனாதிலங்கார ஆகியோரை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினர்.
ஆனால், அவர்களால் எந்த பிரயோசனமும் இல்லை எனவும் காந்தி கொடிக்கார குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவு அதிகாரியை தாக்கிய பொலிஸ் உயர் அதிகாரி இடைநிறுத்தம்
இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரை தாக்கிய உயர்பொலிஸ் அதிகாரியின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் வைத்து அண்மையில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் பம்லப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUeq5.html

பாகிஸ்தானின் உளவு நடவடிக்கையானது தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: கருணாநிதி
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 01:43.41 AM GMT ]
பாகிஸ்தான் உளவுப்பிரிவுக்காக தமிழகத்தில், இலங்கையர்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அண்மைய சம்பவங்கள் தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக திராவிட முன்னேற்றக்கழக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்
இலங்கை தமிழரான அருண் செல்வராஜா, பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையை அடுத்தே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை முதல் தடவையாக இடம்பெறவில்லை. முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன.
ஏற்கனவே தமிழகத்தில் வைத்து பாகிஸ்தானுக்காக உளவுப்பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமீம் அன்சாரி, சகீர் ஹூசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் தகவல்படி அவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரி ஒருவரின் பணிப்பின் பேரிலேயே இயங்கியுள்ளனர்.
தற்போது தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமையானதுää தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழகத்தின் பாதுகாப்பு விடயங்களை கேள்விக்குறியாக்கியுள்ளன.
குறிப்பாக தமிழகம் பயங்கரவாதிகளுக்கான சுவர்க்கமாக மாறியுள்ளதாக தமது ஆட்சியின் போது தற்போதைய முதல்வர் குற்றம் சுமத்தியிருந்தமையை சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி, ஜெயலலிதாவின் ஆட்சியின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSZKUeq4.html

Geen opmerkingen:

Een reactie posten