[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 03:49.22 PM GMT ]
குறித்த இலங்கையர் இன்று ஒக்லேன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார்.
42 வயதான இந்த இலங்கையர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் நண்பியான 23 வயதான கவிதா கந்தையா என்பவரை 2000 ஆம் ஆண்டு பாசெல் நகரில் வைத்து இந்த இலங்கையர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர் சார்பில் இன்று பிணை மனு எவையும் தாக்கல் செய்யப்படவில்லை.
குறித்த இலங்கையர் 2001 இல் நியூஸிலாந்துக்கு சென்று அங்கு போலியான ஆவணங்களை சமர்ப்பித்து 2004 ஆம் ஆண்டு நியூஸிலாந்தின் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkq6.html
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஏனைய கட்சியில் இணைவது அவர்களது ஜனநாயக உரிமை!- த.ம.வி.பு.
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 03:52.30 PM GMT ]
எனினும், ஏனைய கட்சிகளுக்கு ஆதரவு தெருவிப்பதாக குறிப்பிட்டு செல்லும்போது அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து ஏனைய கட்சிகளுக்கு தாவியுள்ளது போல் குறிப்பிடுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
த.ம.வி.பு கட்சியின் முக்கியஸ்தர்கள் அந்தக்கட்சியுடன் இணைந்து கொண்டார்கள், இந்தக் கட்சியுடன் இணைந்து கொண்டார்கள் என ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகைளில்,
சுயலாபத்திற்காகவோ அல்லது வெறுமனே அரசியல் பதவிகளுக்காகவோ அரசியல் நீரோட்டத்திற்கு வந்த கட்சியல்ல எமது கட்சி.
பாதிக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்ற தமிழ் மக்களின் விடிவுக்காய் ஆயுதமேந்தி உயிர்களை தியாகம் செய்ய துணிந்து போராடி ஆயுதப் போராட்டம் மூலம் எமது சமூகத்திற்கு மிஞ்சப் போவது இறப்பும் அழிவும்தான் என தீர்க்கதரிசனமாக சிந்தித்து ஜனநாயக ரிதியான அரசியல் நீரோட்டத்திற்கு வந்த 2008ம் வருடம் தொடக்கம் 2012ம் ஆண்டு வரை கிழக்கு மாகாணசபை ஆட்சியினை செவ்வனே நடத்திக் காட்டியதுடன் இன்றும் மக்களுக்காகப் பாடுபடுகின்ற கட்சியே எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும்.
இககட்சியில் இருப்பர்களும் சரி புதிதாய் இணைபவர்களும் சரி உண்மையான இதய சுத்தியுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுவே எமது கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தனின் உயரிய சிந்தனை.
பொய் வாக்குறுதிகள் கொடுப்பது மக்களை முறையற்ற விதத்தில் வழிநடத்தி ஊழல் புரிவது, அதிகார துஸ்பிரயோகம், மது, மாது, நிதி மோசடிகள் உள்ளிட்ட சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்சியின், செயற்குழுத் தீர்மானங்களுக்கு அமைய விஷேட குழுக்கள் அமைக்கப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்தும் ஏன் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்குவதே எமது கட்சியின் வழக்கமான நடைமுறை.
இதற்கமைய எமது கட்சியின் சில தவிசாளர்கள், நகர, பிரதேச சபை உறுப்பினர்கள் என மக்களின் முறைப்பாடுகளுக்கேற்ப பதவி நீங்கிய சம்பவங்களும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதே போன்று உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்ட பிற்பாடும் பொதுமக்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய கட்சியின் உயர் பதவிகள், அடிமட்ட உறுப்புரிமை பெற்றிருந்த சிலரின் சமூக முரண் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த எமது ஒழுக்காற்றுக் குழுவின் அறிக்கையின் பிரகாரம் ஆதாரபூர்வமாக நிருபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சிலர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டனர்.
அவர்களில் சிலர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளனர். இன்னும் சிலர் வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளமை அது அவர்களின் ஜனநாயக உரிமை, அத்தோடு மக்களின் நலன் சார்ந்த சமூகத்தினை நோக்கிய பார்வையற்ற சமுக முரண் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கட்சிக்குள் வைத்துக் கொண்டு போலி அரசியல் செய்வதற்கு எமது கட்சி ஒருபோதும் தயாரில்லை.
அதனால் தமது அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய தமக்கு ஏற்ற கட்சிகளை எமது கட்சியில் ஒழுக்காற்று நடிவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர்கள் தேர்ந்தெடுத்து இணைவதற்கு நாம் பொறுப்பல்ல.
ஆனால் அவ்வாறு வேறு கட்சிகளுடன் இணைபவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர் பதவியில் இருந்தார்கள் அந்தப் பதவிகளை வகித்தவர்கள் இந்தப் பதவிகளை வகித்தவர்கள் என மெருகூட்டி ஊடகங்கள் செய்தி வெளியிடுவது உண்மைக்கு புறம்பானதாகும். அவ்வாறு செய்திகள் வெளிவரும் போது உறுதிப்படுத்தி வெளியிடுவது சிறந்ததாக அமையும், எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkq7.html
Geen opmerkingen:
Een reactie posten