தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 september 2014

தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினரால் மூழ்கடிப்பு: 15 பேர் கைது

பூசாவில் தடுத்து வைக்கப்பட்ட 56 பாகிஸ்தானியர்கள் விடுதலை
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 03:12.34 PM GMT ]
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 56 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குடியவரவு, குடியகல்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், விடுதலை செய்யப்பட்டவர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசல் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட 56 பேரில், 43 பேர் அஹ்மதி முஸ்லிம்களாவர், 13 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாவர்.
இவர்கள், இலங்கையில் தங்கியிருந்து அகதிகளுக்கான ஐ.நா.வின் ஆணையகத்தின் ஊடாக புகலிடம் கோரிய நிலையில் கடந்த ஜுன் மாதம் 9ஆம் திகதி கைது செய்யப்பட்டு பூசாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று நீக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkq5.html
தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினரால் மூழ்கடிப்பு: 15 பேர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 03:03.35 PM GMT ]
தமிழக மீனவர்களின் படகு ஒன்றை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர், 15 இந்திய மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.
கச்சதீவுக்கு அருகில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தமிழக கியூ பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவல்படி இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று தமிழக மீனவர்களின் படகு ஒன்றை மோதி அதனை மூழ்கடித்துள்ளது.
இதன்போது படகில் இருந்து உயிர்தப்புவதற்காக கடலில் பாய்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மற்றும் ஒரு சம்பவத்தில் இலங்கை கடற்படையினரால் 9 தமிழக மீனவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலை முடித்துக் கொண்டு கரைக்கு திரும்பும்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் வழங்கியுள்ள மீனவர் சம்மேளன தலைவர் டி ஜேசுராஜா,
நேற்று கடலில் மூழ்கிய இரண்டு படகுகளில் இருந்து தப்பிய நான்கு பேரை அழைத்துக் கொண்டு 5 பேரை கொண்டு படகு கரை திரும்பிய போதே இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தெரிவித்துள்ளார்.
குறித்த 9 பேரும் பின்னர் நெடுந்தீவுக்கு அழைத்து செல்லப்பட்டதாக ஜேசுராஜா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவங்கள் குறித்த இலங்கை கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அதில் காங்கேசன்துறைக்கு அருகில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 பேரை தாம் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் நெடுந்தீவு பகுதியில் கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்றும் இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkq4.html

Geen opmerkingen:

Een reactie posten