[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 04:11.05 PM GMT ]
எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதியன்று கையிருப்புக்களை வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள், நெல் மற்றும் அரிசி சேகரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலுக்கு புறம்பாக செயற்படுபவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் அறிவித்தலின்படி இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கையிருப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசியின் விலையில் செயற்கை உயர்வுகளை தடுக்கும் முகமாகவே இந்த நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkrz.html
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் புதுக்குடியிருப்பில் மக்கள் சந்திப்பு! புலனாய்வுத் துறையால் மக்களுக்கு மிரட்டல்
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 03:55.56 PM GMT ]
அதேவேளை சற்று முன்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவர்கள் பார்வையிட்ட இல்லங்களில் ஒன்றுக்குச் சென்றுள்ள இராணுவ புலனாய்வுத் துறையினர் அக்குடும்பத்தினரை மிரட்டியுள்ளதாக அறிய முடிகிறது.
இதுபற்றி வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
வலிகாமம் வடக்கு பிரதேச சபை உபதலைவர் திரு.சஜீவன் அவர்கள் இந்த ஏற்பாட்டுக்கு உதவியாக இருந்தார். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 3 குடும்பங்களைப் பார்வையிடுவதால், இதனை வடமாகாணசபை உறுப்பினர் மேரிகமலா குணசீலன் அவர்களுக்கும் தெரியப்படுத்தி இச்சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தேன்.
மக்களின் 3 வீடுகளுக்கும் சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஒவ்வொரு வீடுகளிலும் மக்களின் கருத்துக்களை பொறுமையாக கேட்டறிந்தனர்.
தற்போதைய வரட்சி நிலைகள், உள்ளக வீதிகள் திருத்தாமையால் படும் சிரமங்கள் மீனவர்கள் எதிர்நோக்கும் தொழில் பிரச்சினைகள், விவசாயிகளின் நிலைமைகள், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தடுப்புக்களால் வெளிவந்த இளையோர் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் உட்பட சகல விடயங்களையும் மக்களிடம் கேட்டு அறிந்ததோடு இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதாக அம்மக்களுக்கு தெரிவித்தனர்.
இறுதியாக வலி வடக்கு பிரதேச சபை உபதலைவர் சஜீவன் அவர்கள் பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தார். என்றார்.
சற்று முன் கிடைத்த தகவல்களின் படி, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவர்கள் பார்வையிட்ட இல்லங்களில் ஒன்றுக்குச் சென்றுள்ள இராணுவ புலனாய்வுத் துறையினர் அக்குடும்பத்தினரை மிரட்டியுள்ளதாக அறிய முடிகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkry.html
Geen opmerkingen:
Een reactie posten