[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 11:45.14 AM GMT ]
பாடசாலை மாணவர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே கூறியுள்ளார்.
பாதுகாப்பற்ற உறவுகள் அதிகரித்திருப்பது, எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளும் பரிசோதனைகள் அதிகரிப்பது என்பன எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை காட்டுவதற்கான காரணமாகும்.
2013 ஆம் ஆண்டு 196 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டு 180 பேர் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 110 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற உடலுறவுகளே இதற்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது.
எயிட்ஸ் நோயிக்கு உள்ளான 95 வீதமானவர்கள் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாகவே நோயிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், பாதுகாப்பற்ற உடலுறவுகளே நாட்டில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
15 முதல் 25 வயதிற்கு உட்பட்ட எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் எயிட்ஸ் நோய் பரவும் ஆபத்து இருப்பதை இது காட்டுகிறது என்றும் சிசிர லியனகோ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUir2.html
ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை ஊவாவில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரங்கள்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 12:03.12 PM GMT ]
ஆளும் எதிர் கட்சிகளின் பிரச்சாரங்கள் வன்முறைகள், விருப்புவாக்கு சேகரிப்பதில் கட்சிக்குள்ளே கலகம் அரச அதிகார துஸ்பிரயோகமென்று சிக்கித் தவிக்கும் ஊவா மக்களிடையே ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் பட்டாளம், அத்தோடு பாதுகாப்பு பிரிவினர், அரச ஊழியர்கள் என்ற பல்லாயிரகணக்கானவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தற்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.
இன்று முதல் திங்கள் வரை அரசு விடுமுறைத் தினமாகையால் ஊவா பகுதியில் தலைநகரைச் சேர்ந்த உயர் தலைவர்கள், அதிகாரிகள், எதிர் கட்சியினர் என்று ஊவா மாகாணத்தை களைகட்டும் விதத்தில் ஆரவார போட்டியான கூட்டங்கள் என்று தற்போது தேர்தல் விழா மயமாகக் கொண்டு இருக்கின்றது.
இங்குள்ள மக்களோ தங்களது நாளாந்த தேவைகளுக்காகவும் நீருக்காகவும் அலைந்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUir3.html
வட மாகாணசபை உறுப்பினர்கள்- அமெரிக்க அதிகாரி சந்திப்பு!
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 12:08.05 PM GMT ]
வடகிழக்கு மாகாணங்களில் அதிகளவு படையினர் நிலைகொண்டிருப்பதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மற்றும் ஊடகங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் அமெரிக்கத் துணை தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் துணைத் தூதுவர் அன்றுமான் நேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணச பை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பு தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நேற்றுக் காலை 10 மணி தொடக்கம் 11.15 மணி வரையில் யாழ்.நகரப் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது பல விடயங்களை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
வடக்கு மாகாணத்தில் போர் நடைபெற்ற பொழுதும், போர் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பாக முழுமையான ஆதராங்களுடன் நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம்.
குறிப்பாக அந்த விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் விளக்கமாக தெரிவித்திருந்தார்.
இதேபோன்று வடகிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் இராணுவ மயமாக்கல் மற்றும் திட்டமிட்ட வகையிலான சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
வடகிழக்கு மாகாணங்களில் அளவுக்கதிகமாக படையினர் நிலை கொண்டிருப்பதனால் மக்களுடைய இயல்பு வாழ்வு பாதிக்கப்படுவதுடன், நீதி துறை மற்றும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பாகவும் நாங்கள் எடுத்துக் கூறினோம்.
இதேபோன்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்படுவது என்ற தீர்மானத்திற்கு நாம் நன்றி தெரிவித்திருக்கின்றோம்.
அதேபோன்று குறித்த விசாரணைக்குழுவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சாட்சியமளிக்க வேண்டும் என நான் மக்களை கேட்டுள்ளதுடன், நானும் 10 பக்கங்கள் கொண்ட சாட்சியத்தினை வழங்கப் போகின்றேன் என்ற விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றேன் என்றார்.
இந்த சந்திப்பில் திருமதி அனந்தி சசிதரன், கே.சயந்தன், ஆனொல்ட் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் சார்பில் து.ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUir4.html
Geen opmerkingen:
Een reactie posten