தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

ரணிலுக்கு நெருக்கமானவர்களுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பு !

ஜனாதிபதி மஹிந்த , அமெரிக்க அதிபரை சந்திக்க உள்ளார் ?

[ Sep 06, 2014 01:25:31 PM | வாசித்தோர் : 575 ]
மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க உள்ளார். இதன் போது, அமெரிக்க அதிபரை ஜனாதிபதி சந்திப்பார் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம், நியூயோர்க்கில் அமைந்துள்ள அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியை, இலங்கை இந்திய தலைவர்கள் சந்திப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் செயலகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 25ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளதுடன், 27ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை இலங்கை ஜனாதிபதி மஹிந்த சந்திக்க உள்ளமை தொடர்பில் கொழும்பிற்கான அமெரிக்கத் தூதரகம் உறுதி செய்யவில்லை.
http://www.athirvu.com/newsdetail/941.html

ஜானக பெரேரா கொலையுடன் தொடர்புடைய புலிகள் உறுப்பினருக்கு 20 ஆண்டு கடூழிய சிறை !

[ Sep 06, 2014 01:29:09 PM | வாசித்தோர் : 590 ]
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ராஜதந்திரியுமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கு அனுராதபுரம் உயர் நீதிமன்றம் இந்த தண்டனையை சற்று முன்னர் அறிவித்துள்ளது.
அனுராதபுரம் உயர் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார ரட்நாயக்கவினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது படுகொலைச் சம்பவத்துடன் தொடர்பு உள்ளதாக வழக்கின் இரண்டாம் பிரதிவாதியான சுதாகரன் நீதவானிடம் ஒப்புக்கொண்டிருந்தார்.
2008ம் ஆண்டு எதிர்க்கட்சிக் காரியாலய திறப்பு விழா நிகழ்வுகளில் பங்கேற்ற மேஜனர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்டவர்கள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் ஜானக பெரோ உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்டனர். முதலாம் பிரதிவாதிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/942.html

ரணிலுக்கு நெருக்கமானவர்களுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பு !

[ Sep 06, 2014 01:32:40 PM | வாசித்தோர் : 550 ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பொதுவான சின்னமொன்றின் கீழ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவதாக ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்காவிற்கு அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவர்களுமான திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, கபீர் ஹாசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இவ்வாறு சந்திரிக்காவை சந்தித்துள்ளனர். எவ்வாறெனினும் பொதுவான ஓர் சின்னத்தின் கீழ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டத்திற்கு சந்திரிக்கா சாதகமாக பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரிடமும் ரணில் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தார். ஜே.வி.பி கட்சி இந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதனை ஏற்கன முடியாது என தமி;ழ்;த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/943.html

Geen opmerkingen:

Een reactie posten