தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

பணத்திற்காக பெறுமதி வாய்ந்த வாக்குகளை விற்றுவிடாதீர்கள்: பதுளை ஆயர் வேண்டுகோள்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக மகிந்த பலாசூரிய?
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 12:31.32 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொலிஸாரின் உதவி அரசாங்கத்திற்கு கிடைக்கும் வகையில் பொலிஸாரை வழி நடத்துவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரியவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இராணுவ மேஜர் ஜெனரலான நந்த மல்லவ ஆராச்சி தற்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
பொலிஸ் துறை சார்ந்த இந்த அமைச்சு கடந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை அரசாங்கத்திற்கு சாதகமாக நடத்தவும் அதற்கு தேவையான பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்த கூடிய நபர் ஒருவர் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்திற்கு ஆதரவானவராக இருக்க வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அதற்கு பொருத்தமான நபர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரியவே என ஜனாதிபதி செயலகத்தில் நடத்தக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
நந்த மல்லவ ஆராச்சியிடம் சிறந்த முகாமைத்துவ திறன் இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்திற்கு சாதகமாக பொலிஸாரை பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் அளவிலான முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் அளவிற்கு அவரிடம் திறமையில்லை எனவும் இதன் போது கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான இலங்கை தூதுவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUir5.html

பணத்திற்காக பெறுமதி வாய்ந்த வாக்குகளை விற்றுவிடாதீர்கள்: பதுளை ஆயர் வேண்டுகோள்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 01:08.33 PM GMT ]
பெறுமதி வாய்ந்த வாக்குகளையும் வாக்கு சுதந்திரத்தையும் வெறுமனே பணத்தையும் மதுபானத்தையும் மற்றும் பொருட்களையும் கொடுத்து வாங்க முயற்சிப்பவர்களுக்கு விற்றுவிடாதீர்கள் என ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பதுளை ஆயர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை ஆயர் ஜே.வின்சன் எஸ். பெர்னாந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஒரு சுதந்திரமாக சுமூகமான தேர்தல் நடைபெறுவதற்கான அடையாளங்கள் வேகமாக மறைந்து போய்க் கொண்டிருக்கின்றது.
தேர்தல் சட்டங்களும் மக்களுடைய சுதந்திரமும் பாதிக்கப்படுவதும் வன்முறைகளுக்குள்ளாக்கப்படுவதும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியிலே கிறிஸ்தவர்களாகிய எமது பணியும் பங்கும் என்ன?
நாங்கள் வெறுமனே பார்வையாளராக நடப்பதை பற்றியும் காண்பவை, கேட்பவை பற்றியும் விமர்சித்துக் கொண்டும் அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும் மட்டும் இருப்பதிலே நிறைவடைய முடியாது.
வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் நடைமுறைக்குச் சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாங்கள் வழங்கும் செய்தி, உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்போம். பிரஜைகளின் சுதந்திரத்தை மதிப்போம். வன்முறைகளைக் கண்டிப்போம்.
உங்களது பெறுமதிவாய்ந்த வாக்குகளையும் வாக்கு சுதந்திரத்தையும் வெறுமனே பணத்தையும் மதுபானத்தையும் மற்றும் பொருட்களையும் கொடுத்து வாங்க முயற்சிப்பவர்களுக்கு விற்றுவிடாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUir6.html

Geen opmerkingen:

Een reactie posten