தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 september 2014

பாப்பரசரின் இலங்கை விஜயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது திருச்சபை- அரசியலாக்க வேண்டாம்: கர்தினால்!

சிறுநீரக நோயாளர்கள் அதிகமான இருக்கும் இரண்டாவது மாவட்டம் வவுனியா!
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 05:54.01 AM GMT ]
இலங்கையில் சீறுநீரக நோயாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் வவுனியா மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் பீ. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்திலேயே அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருக்கின்றனர். அந்த மாவட்டத்தில் 10 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வடக்கு மாகாணத்தில் உள்ள நான்கு வைத்தியசாலைகளில் விசேட பிரிவொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுராதபுரம் மற்றும் மதவாச்சி வைத்தியசாலைகளுக்கு செல்கின்றனர்.
அந்த பிரதேசங்களுக்கு செல்லும் தமிழ் நோயாளர்கள் மொழி பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இதனால் நோயாளர்கள் மாத்திரமின்றி மருத்துவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgx0.html
நீதிமன்ற பதிவாளரின் தங்கச் சங்கிலியை பறித்துச் செல்ல முயற்சித்த நபர் கைது
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 06:00.00 AM GMT ]
புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 32 வயதானவர் எனவும் அவர் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgx1.html
பாப்பரசரின் இலங்கை விஜயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது திருச்சபை- அரசியலாக்க வேண்டாம்: கர்தினால்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 06:05.58 AM GMT ]
பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி விஜயம் செய்வார் என்று கொழும்பு கத்தோலிக்க திருச்சபை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் பாப்பரசர் வருகையை ஒட்டி உத்தியோகபூர்வமான இலட்சினையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஜனவரி 13 ஆம் திகதி இலங்கை வரும் பாப்பரசர், அன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதன் பின்னர்,  கொழும்பு பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் பௌத்த பிக்குமார் உட்பட சர்வமத தலைவர்கள் கலந்து கொள்ளும் சந்திப்பிலும் பாப்பரசர் கலந்து கொள்ள உள்ளதாக கொழும்பு பேராயர் வணக்கதிற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாப்பாண்டவர் இலங்கையில் பொது ஆராதனைகளை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் பாரியளவில் ஆராதனை நடத்த உள்ளார்.
பிற்பகல் 2.00 மணியளவில் மன்னார் மடு தேவாலயத்தில் மற்றுமொரு ஆராதனை ஒன்றை நடத்த உள்ளார்.
அதன் பின்னர் 15ம் திகதி இலங்கையில் இருந்து செல்லவுள்ளதாக கார்டினல் மெல்கம் ரஞ்சித் உறுதி செய்துள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
பாப்பாண்டவரின் இலங்கை விஜயத்தை அரசியலாக்க வேண்டாம் - கர்தினால்
பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தை அரசியலாக்க வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டழகை கோரியுள்ளார்.
ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் பாப்பாண்டவரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்திவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் காலப்பகுதியில் தேர்தல்களோ அல்லது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இடம்பெறாமல் இருப்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgx2.html

Geen opmerkingen:

Een reactie posten