ஐ. நா. ஆணையாளரை எந்த விதத்தில் சந்திக்க அரசு முயற்சி செய்தாலும் விசாரணையை எதிர்கொண்டே ஆகவேண்டும்: ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 05:35.25 AM GMT ]
சர்வதேச விசாரணையை தவிர்க்க அரசு என்ன செய்தாலும் யாரை சந்திக்க முயற்சித்தாலும் விசாரணை நடைபெறுவதை இனி தடுக்க முடியாது.
இலங்கைக்கு பல சந்தர்ப்பங்கள் இருந்த போதும் அதை தற்போதைய அரசு பயன்படுத்த தவறிவிட்டது. ஐ. தே. க சர்வதேச விசாரணையோ அல்லது தலையீட்டையோ விரும்பவில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நாமும் விரும்பினோம், ஆனால் பொது மக்களை தண்டிப்பதை நாம் விரும்பவில்லை, போர் முடிந்தபின் அரசு வடபகுதியை கையாண்ட விதமே அவ்வாறான சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது.
இவ்வாறு ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில், ஐ. நா. சபை ஆணையாளரை சந்திக்க அரசு தற்பொழுது எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கருத்து கூறும் பொழுது மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேசம் இந்த அரசுக்கு பல சந்தர்ப்பங்களை கொடுத்தது தனது பக்க நியாயத்தை தெரிவிக்க வழங்கிய சந்தர்ப்பங்களை எல்லாம் அரசு போர் வெற்றி விழாக்களில் தனது கவனத்தை செலுத்தியது.
சர்வதேசத்தின் ஆதரவின்றி இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதை அரசு புரிந்துக்கொள்ள வில்லை.
தனது ஆட்சியை அரசு கைபற்றி மக்களை ஏமாற்றிக்கொண்டு தன்பக்க நியாயம் உண்டென நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டி கொடுத்து விட்டது என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgxz.html
மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆளும் கட்சி உறுப்பினர் தலைமறைவு (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 06:23.50 AM GMT ]
உள்ளூராட்சி சபை ஒன்றின் பிரதிநிதியான இவர் வண்ணாத்துவில்லு கரைத்தீவு முஸ்லிம் பாடசாலையை சேர்ந்த 6 மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகவே பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.
சந்தேக நபரான உள்ளூராட்சி சபை உறுப்பினர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத மலேசிய பிரஜை கைது
ஹோட்டலுக்கு செலுத்த வேண்டிய 15 லட்சம் ரூபாவை செலுத்த தவறிய மலேசிய பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
58 வயதான இந்த மலேசிய பிரஜை பெந்தோட்ட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறையில் தங்கியிருந்ததுடன் அங்கு உணவையும் உட்கொண்டுள்ளார்.
இதற்கான அவர் அந்த ஹோட்டலுக்கு 15 லட்சத்து 40 ஆயிரத்து 992 ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது. எனினும் அவர் அந்த பணத்தை செலுத்தாத காரணத்தினால், பலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஹோட்டல் முகாமையாளர் பலப்பிட்டிய பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஒரு லட்சம் ரொக்க பிணையிலும் தலா இரண்டு லட்சம் ரூபா சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgx3.html
ராஜபக்ஷவை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 07:01.20 AM GMT ]
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக்கடலில் கச்சதீவு மற்றும் கோடியக்கரை பகுதியில் தனித்தனியாக மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை நேற்று சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இராமேஸ்வரம், பூம்புகார், காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்களின் 8 படகுகளையும் சிங்களக் கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது. அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவருமே இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிங்களப் படையினர் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்ததாக தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்களப் படையினரின் இத்தகைய அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும். அண்மைக்காலமாக, குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சிக் குழு இலங்கைக்குச் சென்று ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், மீனவர்கள் மீதான தாக்குதலும், கைது நடவடிக்கையும் அதிகரித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கி வைக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து 38 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்ட இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், மத்திய, மாநில அரசுகளின் வாக்குறுதியை ஏற்று இம்மாதத் தொடக்கத்தில் தான் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனர்.
இதுவரை மொத்தம் 3 முறை அவர்கள் கடலுக்குச் சென்றுள்ள நிலையில், மூன்று முறையும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக, கடல் வளத்தை தமிழக மீனவர்கள் அழிப்பதாக அடிப்படையற்ற குற்றச்சாற்றை சுமத்தியிருக்கும் இராஜபக்சே, தமிழக மீனவர்களின் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பித்தர முடியாது என்று திமிராக கூறியுள்ளார்.
இந்தியாவிடமிருந்து உதவிகளைப் பெற்றும், போர்க்குற்றம் தொடர்பான பிரச்சினைகளில் உலக நாடுகளின் நெருக்கடியிலிருந்து இந்தியாவின் அரவணைப்பால் தப்பித்தும் ஆட்சி நடத்தி வரும் ராஜபக்ஷ, இப்போது இந்தியாவையே மிரட்டும் வகையில் பேசுவதற்கு இந்திய அரசும் ஒருவகையில் காரணம் என்பதை மறுக்க முடியாது.
தமிழக மீனவர்களை கைது செய்யும் பிரச்சினையாக இருந்தாலும், இலங்கை இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாற்றுகளாக இருந்தாலும் இலங்கையிடம் இந்தியா மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது தான ராஜபக்ஷவுக்கு இவ்வளவு துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. இனியும் இதேபோன்ற அணுகுமுறையை மத்திய அரசு கடைபிடித்தால் அது இந்திய நலனுக்கே எதிராக அமைந்துவிடும் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதேபோல், தமிழக அரசும் இந்தப் பிரச்சினையில் பெயரளவுக்கு கண்டனம் தெரிவிப்பதைத் தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இதுவரை 150க்கும் மேற்பட்ட முறை தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இவற்றுக்கு எதிராக முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 44 முறையும், இப்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கு 13 முறையும் கடிதம் எழுதியதைத் தவிர வேறு எந்த உறுதியான நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ளவில்லை.
தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவதுடன், இந்திய இறையாண்மைக்கே சவால் விடும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை அரசு மீது மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இலங்கை மீது இனியும் கனிவு காட்டுவதை விடுத்து, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 76 மீனவர்களையும், 72 படகுகளையும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷவை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்.
அதை செயல்படுத்த இலங்கை மறுக்கும்பட்சத்தில் அந்நாட்டின் மீது கடுமையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா தயங்கக் கூடா என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgx4.html
Geen opmerkingen:
Een reactie posten