புதிதாக வந்த ஐ,நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் மிகவிரைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் சிறந்த முடிவினை எடுக்க வேண்டும் என்றும் அவரின் கன்னி அமர்வில் வலியுறுத்தி இருந்த நிலையில் மிகவும் வரலாற்று முக்கியமிக்க தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தபட்டுவந்த தற்காலிக பாதுகாப்பு விசாவினையும், மற்றும் கட்டாய நீண்ட கால தடுப்பு காவல் வழக்கத்தினையும் ஒரு முடிவுக்கு கொண்டுவரக்கூடிய தீர்ப்பொன்றை அவுஸ்திரேலிய உயர் நீதி மன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பானது புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் வழங்கப்படுவதற்கு திட்டமிடபட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு விசாக்களும் மற்றும் வரையறையற்ற கட்டாய தடுப்பு காவல் விதிமுறைகளுக்கும் ஒரு பாரிய மரண அடியாக அவுஸ்திரேலியா சட்ட வல்லுனர்களால் பார்க்கப்படுகின்றது.
நீதிபதிகளினால் வழங்கப்பட்ட இந்த ஏக மனதான தீர்ப்பினால் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் தற்காலிக பாதுகாப்பு விசாக்களை கொடுப்பதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்களின் நிரந்தர பாதுகாப்பு விசாவுக்கான விண்ணப்பங்களை இல்லாமல் பண்ணும் நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றிலே முதல் தடவையாக உயர் நீதிமன்றம் புகலிடக் கோரிக்கையாளர்களின் தடுப்பு காவலுக்கு உரிய எல்லை விதிமுறைகளை இந்த தீர்ப்பில் வலியுறுத்திக் கூறியுள்ளது.
இவ்வளவு காலமும் அவுஸ்திரேலியா பிரஜைகள் அல்லாதோரை தடுத்து வைப்பதற்குரிய சட்ட விதிமுறைகள் தெளிவான முறையில் அரசாங்கத்தினால் பின்பற்றப்படவில்லை.
இந்த தீர்ப்பின் மூலம் உயர் நீதிமன்றம் இப்படியானவர்களை தடுப்பு காவலில் வைப்பதற்கு மூன்று சந்தர்ப்பங்களிள் மட்டுமே இடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அவையாவன:
[1],ஒரு நிரந்தர விசாவினை விண்ணப்பிப்பதற்கு
[2],அப்படிபட்ட விண்ணப்பத்தை விசாரிப்பதற்கு
[3],ஒருவரை தமது சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு
இந்த மூன்று விடயங்களும் கூடிய விரைவில் நடைமுறைபடுத்தப்பட்டு முடிவுகள் தீர்மானிக்கப்படும் வரையும் தான் ஒருவரின் தடுப்புக் காவல் சட்டபூர்வமனதாகும்.
ஒருவரின் தடுப்பு காவலின் காலவரையறை இந்த விடயங்கள் தீர்மானிக்கப்படும் வரைதான் இருக்க வேண்டும்.
தடுப்பு காவலின் காலம் என்பது அவுஸ்திரேலிய அரசியல் அமைப்புக்கு உட்பட்டதாகும், அதாவது பாராளுமன்றமோ செனட் சபையோ புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதன் மூலம் அரசியல் அமைப்பை மாற்ற முடியாது.
2013 யூலை மாதத்துக்கு முதல் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வந்த புகலிடக் கோரிக்கையாளர்களை இனி மேலும் தடுத்து வைப்பது பாரிய சட்டவிரோதமான செயல் என இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அவுஸ்திரேலியா அரசு மேற் கூறப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக விடுவிக்கவோ அல்லது அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக விசாரித்து மிக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதை மீறி நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் நீதி மன்றத்துக்கு முறைப்பாடு செய்யும் உரிமையுடையவர்கள், கால வரையறை இன்றி ஒருவரை தடுத்து வைப்பது அவுஸ்திரேலியா அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது.
2013 செப்டம்பர் மாதத்துக்கு பின் அவுஸ்திரேலியா தடுப்பு முகாம்களில் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்துவைக்கும் காலம் 100ல் இருந்து 350 நாட்களாக உள்ளது. இப்போது மொத்தமாக 4000க்கும் மேற்ப்பட்ட அகதிகள் முகாம்களில் உள்ளனர்.
முகாம்களுக்கு வெளியே வீடுகளில், சமூக தடுப்புகாவலில் உள்ளவர்களின் தொகை இதில் சேர்க்கப்படவில்லை.
அவுஸ்திரேலியா உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம், அரசு அகதிகளை கால வரையறையின்றியோ அல்லது தீவிரமான விசாரணைகள் அல்லது மறுபரிசீலனைகள் இன்றியோ தடுத்து வைப்பதையிட்டு கூடிய கவனம் செலுத்தும்படி மற்றைய நீதிபதிகளுக்கும் இந்த உயர் நீதி மன்ற நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் டோனி அபேட்டும் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனும் புகலிடக் கோரிக்கையாளர்களை கையாளும் நடைமுறைக்கு இந்த தீர்ப்பு ஒரு பாரிய சவாலாக அமைந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUgxy.html
Geen opmerkingen:
Een reactie posten