தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை: ஜனாதிபதி உத்தரவு

சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து சுமந்திரன் சந்தேகம்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 02:10.39 AM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாம் தடவையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியாது என சரத் என் சில்வா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் வேறு ஓர் உறுப்பிருக்கு ஜனாதிபதி பதவியை வழங்கவோ அல்லது ஜாதிக ஹெல உறுமயவின் தேவைக்காகவோ சரத் என் சில்வா இவ்வாறு கோருகின்றார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சட்ட ரீதியாக 2016ம் ஆண்டிலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
போர் வெற்றி தொடர்பில் தற்போதைய ஜனாதிபதிக்கு காணப்பட்ட மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றங்களைச் செய்தேனும் தற்போதைய ஜனாதிபதியினால் தேர்தலை வெற்றிகொள்ள முடியுமா என்பது சந்தேகமே?
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளமையை எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் மற்றும் குடும்ப அதிகாரம் மக்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
சிறுபான்மை மக்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
வெறுமனே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாரில்லை என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஒன்றிணைப்போம் என்ற தொனிப்பொருளில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUjx5.html
ஜப்பான் பிரதமர், கியூபா வெளியுறவு அமைச்சர் நாளை இலங்கைக்கு விஜயம்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 02:25.22 AM GMT ]
ஜப்பான் பிரதமர் சின்சோ அபே இலங்கைக்கும் பங்களாதேஸுக்கும் இந்த வார இறுதியில் விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அபே, நாளை ஞாயிற்றுக் கிழமையன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
இந்த விஜயத்தின் அடிப்படையில் 24 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு செல்லும் முதலாவது ஜப்பானிய பிரதமராக அபே கருதப்படுகிறார்.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு இணங்கவே அபேயின் விஜயம் இடம்பெறுகிறது.
தமது விஜயத்தின்போது அபே, இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்துவார்.
ஜப்பானிய பிரதமரும் உயர்மட்ட வர்த்தக மற்றும் ஏனைய துறைகளின் அதிகாரிகளும் இலங்கைக்கு செல்கின்றனர்.
கியூபாவின் வெளியுறவு அமைச்சர் நாளை இலங்கை விஜயம்
கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரொட்ரிகய்ஸ் பாரில்லா நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் 55வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதன் நிமித்மே கியூபாவின் வெளியுறவு அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளது.
ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதத்தில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக கியூபாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போதே அவர் கியூபாவின் வெளியுறவு அமைச்சருக்கு இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUjx6.html
தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை: ஜனாதிபதி உத்தரவு
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 02:53.19 AM GMT ]
தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் ஜனாதிபதி நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
சில தினங்களில் ஊவா மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
அண்மைய நாட்களாக தேர்தல் வன்முறைகள் மற்றும் விதி மீறல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
குறிப்பாக மொனராகல மாவட்டத்தில் அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான ஓர் நிலைமையில் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, ஆளும் கட்சியினரே அதிகளவில் தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUioy.html

Geen opmerkingen:

Een reactie posten