தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 september 2014

ராஜபக்ச அரசை இணங்க வைப்பது இந்தியாவின் பொறுப்பு: வரதராஜபெருமாள்

பாலியல் வல்லுறவு: வைத்தியருக்கு மரண தண்டனை- கரடியானாறு காட்டில் ஆயுதங்கள் மீட்பு
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 05:45.01 AM GMT ]
2007 ஆம் ஆண்டு யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து பின்னர் 6ஆவது  மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த வைத்திய கலாநிதி ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த தண்டனையை இன்று விதித்தது.
இந்திக சுதர்சன என்ற இந்த வைத்தியர் தம்மிடம் சிகிச்சை பெற வந்த யுவதியையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவரை 6 ஆவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மரதன்கடவல என்ற இடத்தை சேர்ந்த இந்த வைத்தியர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த சமிலா திஸாநாயக்க என்பவரையே கொலை செய்தார்.
பாலியல் துஸ்பிரயோகத்துக்கு பின்னர் குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்டதாக காட்டுவதற்காகவே வைத்தியர் அவரை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
கரடியானாறு வடிச்சல் காட்டில் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம் - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வடிச்சல் காட்டில் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ- 56 ரக துப்பாக்கி மகஸின்கள் 2, ரீ-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 192, மோட்டோர் குண்டு 1 (61 ரகம்) என்பனவே மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து கரடியனாறு பிரிவுக்குப் பொறுப்பான புலனாய்வுப் பகுதியினரால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டு கரடியனாறு பொலிஸில் நேற்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன.
இந்த ஆயுதங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவு பொலிஸாரும், கரடியனாறுப் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் பலி
கிளிநொச்சி, இயக்கச்சி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் பலியாகியுள்ளதாக கிளிநொச்சி மற்றும் பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்களில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, பின்னால் சென்ற வான் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இயக்கச்சி பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வந்த குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஆர்.டி. சுமிந்த என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்து பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை குருணாகல் நாரம்பல - கிரிஉல்ல வீதியில் இடம்பெற் வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார்.
நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கிரிஉல்ல நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கிரிஉல்ல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 52 வயதான உத்தியோகஸ்தரே இவ்வாறு உயரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்துள்ள மோட்டார் சைக்களில் ஓட்டுநர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் வன்முறைகளை பார்க்க மாத்திரமே எமக்கு முடியும் – தேர்தல் ஆணையாளர்
தேர்தல் வன்முறைகளை பார்க்கவே எம்மால் முடியும். வன்முறைகளை தடுக்கும் அதிகாரம் எமக்கு கிடையாது.
வேறு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேர்தல் வன்முறைகள் இடம்பெறவில்லை.
தேர்தல் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பதை தவிர எமக்கு தலையிட முடியாது. எனினும் சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல்களை நடாத்த நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUks7.html
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீன ஜனாதிபதி கலந்துரையாடுவார்?
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 03:52.07 AM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்யும் போது சீன ஜனாதிபதி ஜின்பிங், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் குறித்து கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் போட் சிட்டி, கொழும்பு நகர ரயில் சேவை திட்டங்கள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜின்பின் இந்த மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் இருந்து சென்ற செய்தியாளர்களிடம் கருத்துரைத்த சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர் லியூ ஜியான்சோ, சீனாவின் எதிர்ப்பார்ப்புக்களை வெளியிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி நுரைச்சோலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளையும் தமது விஜயத்தின் போது ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
1949 ஆம் ஆண்ட சீனாவின் புதிய தேசம் உருவாக்கப்பட்ட போது, மேற்கத்தைய நாடுகள் மேற்கொண்ட தடைகளின் போது இலங்கை சீனாவுக்கு வழங்கிய ஆதரவுக்காக சீன மக்கள், இலங்கை மக்கள் மீது அன்பு கொண்டுள்ளதாகவும் உதவி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUks6.html
ராஜபக்ச அரசை இணங்க வைப்பது இந்தியாவின் பொறுப்பு: வரதராஜபெருமாள்
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 02:58.04 AM GMT ]
இலங்கையில் சிங்கள குடியேற்றங்களும் அதிக இராணுவ பிரசன்னங்களும் தமிழர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.
தமிழக செய்தியாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர், வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பது பொருளதாரத்தை மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் பாதுகாப்புக்காக மூன்றில் ஒரு பங்கு நிதி அநாவசியமாக செலவிடப்படுகிறது. இந்த நிதியை கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர ராஜபக்ச அரசாங்கத்தை இசைய வைப்பது இந்தியாவின் பொறுப்பாகும் என்று வரதராஜபெருமாள் தெரிவித்தார்.
இந்தியாவின் அனுசரணையுடனேயே இந்திய இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டது. எனவே அந்த உடன்படிக்கை முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும்.
தற்போது மக்களால் வடக்குகிழக்குக்கு முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அந்த மாகாணங்களுக்கு அதிகாரங்கள் இல்லை என்று பெருமாள் குறிப்பிட்டார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து கருத்து வெளியிட்ட பெருமாள் 1974 ஆம் ஆண்டு உடன்படிக்கையின்கீழ் பாக்குநீரிணையில் இரண்டு நாட்டு மீனவர்களும் பயமின்றி தொழிலில் ஈடுபட முடியும். இது தற்போதும் அமுலில் உள்ளதாக வரதராஜபெருமாள் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUks5.html

Geen opmerkingen:

Een reactie posten