தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 september 2014

சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்தாக இருக்காது! ஜெயலலிதா நம்பிக்கை

கட்டுநாயக்கவில் கட்டார் விமானம் அவசரமாக தரையிறக்கம்
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 02:41.06 AM GMT ]
டோகாவுக்கும் அவுஸ்திரேலிய பேர்த் நகருக்கும் இடையில் பயணித்துக் கொண்டிருந்த கட்டார் எயார்வேய்ஸ் விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் எரிபொருள் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டமையை அடுத்தே இந்த அவரச தரையிறக்கம் திங்கட் கிழமை இரவு நிகழ்ந்தது.
விமானத்தின் ஒரு இயந்திரத்தில் ஒழுக்கு ஏற்பட்டதாக விமானி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் சுமார் 30 நிமிடங்களில் குறித்த விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டது.
எனினும் தரையிறக்கப்பட்ட பின்னர் விமானத்தின் இடது இறக்கையில் பிரச்சினை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு அது திருத்தப்பட்ட நிலையில் விமானம் 10 மணித்தியாலம் தாமதமாக பேர்த்தை சென்றடைந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUks4.html
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்தாக இருக்காது! ஜெயலலிதா நம்பிக்கை
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 01:41.47 AM GMT ]
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமருக்கு நேற்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தநிலையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தமிழக மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையானதுää மனித நேயமற்ற பயமுறுத்தும் நடவடிக்கையாகும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்படும் மீனவர்களின் படகுகள் தடுத்துவைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் தமது ஆலோசனையின்படியே இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களின் படகுகளை தடுத்து வைத்துள்ளதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்து தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக மீனவ சமூகம் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இது இந்திய மத்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தாக இருக்காது என்று தாம் நம்புவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவது தமிழக அரசாங்கத்துக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUks2.html

Geen opmerkingen:

Een reactie posten