வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவிததுள்ளார்.
சி. பாஸ்க்கரா மேலும் கருத்து வெளியிடுகையில்,
இன்று காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினம். எமது நாட்டின் முதன்மை பிரச்சினையாக காணப்படுவது இந்தப் பிரச்சினையே. இறந்தவர்களுக்கு கூட இறந்துவிட்டார்கள் என்ற முடிவு தெரியும்.
ஆனால் காணமல் போனவர்களின் நிலை, என்ன ஆனார்கள், எங்கு, எப்படி, எவ்விதமான துன்பத்துடன் செத்து செத்து பிழைக்கிறார்கள் என்பது தெரியாது. காணாமல் போனவர்களின் நினைப்புடனேயே குடும்ப உறவுகள் தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இங்கு கருத்து தெரிவித்த காணாமல்போன தனது மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கிடைத்தால் கூட தான் ஆசுவாசப்படுவேன் என்ற ஒரு தாயின் கருத்து எவ்வளவு பாரதூரமான செய்தியாக இருக்கின்றது.
இந்த அரசு 9 ஆணைக்குழுக்களை 2005ம் வருடம் முதல் இன்று வரை நியமித்துள்ளது. இப்போது கூட சர்வதேச விசாரணைக்கு எதிர்மறையாக அரசு ஓர் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கின்றது. முதல் நடந்த விசாரணை அறிக்கைகளுக்கு என்ன நடந்துது என வினாவ விளைகின்றோம்?
அரசிடம் காணாமல் போனவர்களை கண்டறியும் ஒரு திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல் கிடையாது. ஏனெனில் முன்பு வெளிநாட்டவர்களை விசாரணைக்கு அனுமதியோம் என்றது அரசு.
உள்நாட்டவர்களே விசாரணையை நடாத்துவார்கள் என்று கூறியது அரசு. இன்று அதே அரசு வெளிநாட்டவர் மூவரை தனது விசாரணைக்கு நியமித்துள்ளது. இதிலிருந்து அரசு விசாரணை என்று கபடத்தனமாக தீர்வு காண முயலாமல் உலகையும் மக்களையும் ஏமாற்றி வர முயற்சிக்கிறது.
காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை அவர்களின் குடும்பங்கள் ஓயமாட்டார்கள். அவர்களுக்காக போராடும் நாமும் ஓயமாட்டோம். இதை அரசுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
அண்மையில் மதிப்புக்குரிய பொருளாதார அமைச்சர் தெரிவித்த கருத்தானது, இணக்க அரசியலையா? சராணாகதி அரசியலையா? அவர் விரும்புகிறார் என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.
இணக்க அரசியல் என்ன என்பதை மதிப்புக்குரிய வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன் பதவி ஏற்றது முதல் மிகத் தெட்டத் தெளிவாக செய்து காட்டியுள்ளார்.
அமைச்சரின் கூற்றுகளில் ஒன்றான வடமாகாண சபை வென்றபின் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதாக தெரிவித்ததானது, வடமாகாண சபை மத்திய அரசிடம் கட்டுப்பாட்டில் உள்ளதை அவர் மறந்துவிட்டாரா? இல்லாமல் போய்விட்டது என நினைக்கின்றாரா?
வடமாகாண சபை என்பது உரிமைக்காக போராடிய தமிழ் மக்களின் விடிவுக்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை ஆகும்.
அரசு பெரும்பான்மை சமூகத்தை சமாளிப்பதற்கு மற்ற மாகாணத்துக்கும் மாகாண சபை நிர்வாகத்தை விரிவுபடுத்தியது. அரச ஆதரவு இனவாதிகளால் திட்டமிடப்பட்டு வடக்கு இகிழக்கு தனிதனி மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது.
உரிமைக்காக போராடி வென்ற வடமாகாண சபையில் அபிவிருத்தியை மட்டும் பேசுவது ஏற்புடையதல்ல. வடமாகாண சபை ஒன்றே ஒன்றுதான் எதிர்க்கட்சியிடம் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உள்ளது.
அரசின் இது போன்ற கருத்துக்கள் காணாமல் போனவர்களை கண்டறிந்து கொடுப்பதற்கும், அரசியல் தீர்வு திட்டத்திற்கும் அரசுக்கு எள்ளளவு அக்கறையும் இல்லை என்பதும் காலத்தை கடத்தும் செயற்பாடு என்பதும் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றது.
இவ்வேளையில் இந்தியத் தூதுவர் அண்மையில் அச்சுவேலி தொழிற்பேட்டையை திறந்து பேசிய பேச்சில் வடமாகாண சபையும் இலங்கை மத்திய அரசும் இந்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற பேச்சு தமிழர்களாகிய எமது நசுக்கப்பட்ட இனத்தின் விடிவிற்கான ஒரு பேச்சாக நோக்கப்பட வேண்டியிருக்கின்றது.
இந்தியாவை நாம் நம்புகின்றோம் முன்பு நாம் வரையறைக்கு கூடுதலாக நம்பிவிட்டோம். இதனால் நாம் பலமுறை ஏமாந்து போய் இருக்கின்றோம். இப்பொழுதும் நம்புகின்றோம்
இந்தியா கொண்டுவந்த 13வது திருத்தச் சட்டம், வட- கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாகுவதற்கான முதல் கால்கோல் என நோக்குவோமாக என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjq3.html
Geen opmerkingen:
Een reactie posten