[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 12:22.42 PM GMT ]
முக்கியமாக மன்னாரிலுள்ள புனித தலமான மடு திருத்தலத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை அதிவணக்கத்துக்குரிய மன்னார் ஆயர், குரு முதல்வர் உட்பட அனைவரும் முழு வீச்சில் இறங்கி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பரிசுத்த பாப்பரசரின் விஜயம் தெற்கிலே பொதுபல சேனாவுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயினும் ஈழத்தமிழருக்கு குறிப்பாக கத்தோலிக்க தமிழர்களுக்கு இவரது விஜயம் இனிப்பான செய்தியாகவே உள்ளது.
நாம் மகிழ்ச்சி அடைகின்ற அதேவேளை, நவாலி தேவாலய படுகொலை, மடுத்தேவாலய படுகொலை, வங்காலைப் புனித ஆலய பங்குத்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் படுகொலை ஆகிய படுகொலைகளை வத்திக்கான் அரசிற்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
மேலும் பரிசுத்த பாப்பரசரின் வருகையால் பல வருடங்களாக காடுகளில் அவல வாழ்வு வாழும் நூற்றுக்கணக்கான மன்னார் கத்தோலிக்க தமிழ் குடும்பங்கள் தமது சொந்த இடமான முள்ளிக்குளம் திரும்பவும் வலி.வடக்கில் இருந்து துரத்தப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் தமது இருப்பிடம் திரும்பவும் வழிபிறக்க வேண்டுவதுடன், அரக்கர் பிடியிலுள்ள தமிழ்த் தேசியம்- விடுதலை பெற வழியேற்பட வேண்டுமெனவும் விரும்புகின்றோம்.
வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சிங்கள கத்தோலிக்கர்களை கவரும் இந்த தந்திரோபாயம் தமிழ் கத்தோலிக்கர்களிடம் பலிக்காது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றோம்.
இரத்தக் கறைபடிந்த பூமி பரிசுத்தரின் கால்பட்டு புனித பூமியாக மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம் என யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சூசை ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjq0.html
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க உதவுவேன்: சரத் என் சில்வா
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 12:46.37 PM GMT ]
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் 2016 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தான் எந்த விதத்திலும் அரசியலுக்கு வரப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர், எதிர்கால அரசாங்கம் ஒன்றில் எந்த பதவியையும் வகிக்க போவதில்லை எனவும் ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க சட்ட ரீதியான உதவியை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அரசிலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது அரச நிறுவனங்களுக்கு இடையிலான அதிகாரங்களில் சமநிலையற்ற அதிகாரங்கள் இருக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் அதிகாரங்களில் ஏனைய நிறுவனங்கள் தலையிடாத வகையில் அது உருவாக்கப்பட வேண்டும். அதுவே 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் குறைபாடு எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjq1.html
Geen opmerkingen:
Een reactie posten