தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 september 2014

அரசாங்கத்திற்கு எதிராக 10 பக்கங்களைக் கொண்ட சாட்சியம் வழங்கப் போகிறேன்: சிவாஜிலிங்கம்!

தியாக தீபம் திலீபனின் 27ஆம் ஆண்டு நினைவுகூரலும் கவனயீர்ப்பு ஒன்று கூடலும்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 12:56.24 PM GMT ]
தியாக தீபம் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்ச்சியும்,தென் தமிழீழத்தில் 1990ம் ஆண்டு செப்டெம்பர் திங்களில் நடாத்தப்பட்ட படுகொலைகளின் 24ஆம் ஆண்டு நினைவுகூரல் கவனயீர்ப்பு ஒன்று கூடலும் பிரித்தானியாவில் நினைவுகூரப்படவுள்ளது.
தியாக தீபம் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்ச்சியும், தென் தமிழீழத்தில் 1990ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடாத்தப்பட்ட படுகொலைகளின் 24ஆம் ஆண்டு நினைவுகூரல் கவனயீர்ப்பு ஒன்று கூடலும் இம்மாதம் 26ஆம் திகதி வெள்ளி மாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square இல்) நடைபெற உள்ளது.
எமது தாயகத்தை இந்திய வல்லாதிக்கம் ஆக்கிரமித்த காலத்தில், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். சிறைக் கூடங்களிலும், இராணுவ, காவல் துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும். தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, நீர் கூட அருந்தாத உறுதியான அறவழிப் போராட்டத்தை திலீபன் அவர்கள் ஆரம்பித்தார். அறவழியில் போராடி விடுதலை பெற்ற நாடாகத் தன்னை உலக அரங்கில் முன்னிறுத்தும் இந்திய வல்லாதிக்கத்தின் முகத்திரை, தியாக தீபம் திலீபன் அவர்கள் தன் ஊனுருக்கி வளர்த்த வேள்வித் தீயில் எரிந்து சாம்பலானது.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வீரமுழக்கமிட்டவரின் உயிர் காற்றோடு காற்றாகி தமிழர் மூச்சோடு கலந்து 27 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்று வரை வல்லாதிக்க அரசுகளின் அனுசரணையோடு தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரச பயங்கரவாத இனக்கருவறுப்புத் தாண்டவம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
1990 செப்டெம்பரில் ஊர்காவல் படையினருடன் இணைந்து சிறீலங்காப்படையினர் தென் தமிழீழத்தில் நிகழ்த்திய படுகொலைகள், அரச பயங்கரவாதிகளின் இனவெறியை உலகுக்குப் பறைசாற்றியது.
1990ம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் நாள் தொடக்கம் 23ஆம் நாள் வரையான காலப்பகுதியில் தென் தமிழீழ மண்ணில் கட்டங்கட்டமாக பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
செப்டெம்பர் 5ஆம் நாள் வந்தாறுமூலை பல்கலைகழகத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்களைச் சுற்றி வளைத்த சிங்களப்படையினர் அங்கிருந்தவர்களில் 158 தமிழ் இளைஞர்களை பிடித்து கொண்டு சென்று படுகொலை செய்தனர். பின்னர் செப்டெம்பர் 9 இல் சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் முதலிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தோர் என 184 பேரை சிங்களப்படையினர் படுகொலை செய்தனர்.
இவ்வாறு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்து அரச பயங்கரவாதம் தலை விரித்தாடியது. அதே மாதம் 23இல் மீண்டும் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தில் 16 இளைஞர்களை சிங்களப்படையினர் பிடித்து கொண்டு சென்று சென்றனர். பின்னர் அவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படுகொலைகள் ரணசிங்க பிரேமதாசா சிறீலங்கா அரசுத் தலைவராக இருந்த போது நடாத்தப்பட்டன.  இவ்வாறு சிறீலங்காவில் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களின் காலப்பகுதியிலும் தமிழ் இனத்தையே முற்றாக அழிப்பதற்கான ஆதிக்க வல்லாயுதங்கள் அத்தனையும் முழுப் பலத்துடனும் பிரயோகிக்கப்பட்டன என்பதையும், இன்றும் அது தொடர்ந்த வண்ணமே உள்ளது என்பதையும் வரலாறு பதிந்து கொண்டே செல்கிறது.
இந்த நினைவுகளை எல்லாம் மீட்டுப் பார்ப்பதும்,நடப்பு நிகழ்வுகளையும், திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற அநீதியான நிகழ்ச்சிகளையும் அவதானமாக உற்று நோக்கி திடமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதும் காலத்தின் தேவை.
ஆறாத வலிகளை அனுபவிக்கின்ற போதும் தாய் மண்ணுக்காக விதையானோரை நெஞ்சில் நிறுத்தி தெளிவுடனும் உறுதியுடனும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் தமிழராகிய நாம் வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்த்து, முன்னோக்கி நகர்வது அவசியம்.
எனவே, இம்மாதம் 26ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற உள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்ச்சியிலும் கறுப்பு செப்டெம்பர் படுகொலைகள் நாள்கள் நினைவு கூரலிலும் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் என பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjq2.html
மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்: அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 01:24.33 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் தேவையேற்பட்டால் அது தொடர்பில் சட்ட ஆலோசனைகள் பெறப்படும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முடிவு தொடர்பாக எவரும் சவால்களை முன்வைக்கலாம் எனவும் ஆனால் அது போன்ற சவால்கள் குறித்து அரசாங்கத்திற்கு அக்கறையில்லை எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அண்மையில் கூறியிருந்தார்.
ஆனால், ஏனைய சட்ட நிபுணர்கள் ஜனாதிபதி மூன்றாவது முறையாக போட்டியிட முடியும் என கூறியுள்ளனர். அரசாங்கம் அதற்கான ஆதரவை வழங்கும் எனவும் ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjq4.html
சர்வதேச விசாரணைக்கு அஞ்சவில்லை! சாட்சியமளிக்க தயார்: சரத் பொன்சேகா
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 02:03.52 PM GMT ]
இலங்கை தொடர்பில் நடத்தப்படும் சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்குமாறு கோரிக்கை விடுத்தால், அதனை எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையில் ஆஜராக சென்றிருந்த பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இதனை கூறியுள்ளார்.
சர்வதேச விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.
யுத்தம் சர்வதேச சட்டங்களுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டது. இராணுவம் சட்டவிரோதமான முறையில் செயற்படவில்லை. ஆனால், வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களை நாங்கள் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிடவில்லை.
சர்வதேச விசாரணைகளுக்கு நான் அஞ்சப் போவதில்லை. விசாரணைக்கு அழைத்தால், சாட்சியமளிக்கத் தயாரக இருக்கின்றேன்.
குற்றம் இழைக்கவில்லை என்பதை ஒப்புவிக்க எந்த நீதிமன்றத்திற்கும் செல்ல தயார்.
சர்வதேச விசாரணையாளர்களிடம் சாட்சியமளிப்பதை தடுக்க அரசாங்கம், அதற்கு தயாராக இருக்கும் நபர்களை அச்சுறுத்தி வருகிறது.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமையில் இருந்து மக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பும் சர்வதேசமும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjq5.html
அரசாங்கத்திற்கு எதிராக 10 பக்கங்களைக் கொண்ட சாட்சியம் வழங்கப் போகிறேன்: சிவாஜிலிங்கம்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 02:19.54 PM GMT ]
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகம் நியமித்துள்ள சர்வதேச விசாரணைக் குழுவிற்கு 10 பக்கங்களைக் கொண்ட சாட்சியத்தை வழங்கப் போவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தன்னை என்ன செய்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணை நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற போதும் சாட்சியம் வழங்குவது மந்த கதியிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சிவாஜிலிங்கம், நீதியைப் பெற்றுக் கொண்டு இனத்தின் விடுதலையை நோக்கிப் பயணிப்பதற்கு அனைவரும் சாட்சியமளிக்க முன்வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தினால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது, கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையான குற்றங்கள் மீறல்கள் தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. அதேநேரம் இதன் பின்னரும் முன்னரும் இடம்பெற்ற சம்பவங்கள் குற்றங்கள் தொடர்பிலும் சாட்சியங்களை வழங்க முடியம்.
இங்கு இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென்று நாம் கோரி வந்தபோது, இனப்படுகொலை பற்றி விசாரிக்க முடியாதென்றும் அது தொடர்பில் பேசக்கூடாதென்றும் சிலர் கூறி வந்தனர். இருந்தும் இத்தகைய விசாரணைகள் தொடர்பில் வடக்கு கிழக்கிலிருந்து 33 மாகாண உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியிருந்தோம்.
இந்நிலையில் ஐ.நா விசாரணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்ட திருத்தத்துடன், தற்போது சர்வதேச குற்றமென்ற குற்றமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது.
இக்குற்றத்திற்குள்ளேயே இனப்படுகொலை என்ற குற்றம் உள்ளடங்குகின்றது. இதற்கமைய இது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆயத்தமாகவே இருக்கின்றனர்.
தமிழினத்திற்கு எதிராக இழைக்கபப்பட்ட அநீதிகள் குற்றங்களை எடுத்துச் சொல்லி எமக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு இறுதிச் சந்தர்ப்பமாகவே இந்த விசாரணை ஆணையகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்திற்கு சாட்சியங்களை வழங்க வேண்டுமென்பது ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற வரலாற்றுக் கடமையாக அமைகின்றது.
இதற்கமைய நானும் பத்துப் பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை தொகுப்பாக தொகுத்து விசாரணைக்குழுவிடம் கையளிக்க உள்ளேன். இவ்வாறு கொலை, காணாமல் போதல், சிங்கள குடியேற்றம், காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடஙக்கியதான பத்துப் பக்கம் கொண்ட சாட்சியத்தை வழங்க உள்ளேன்.
இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நான் சாட்சியமளிப்பதில் உறுதியாகவே இருக்கின்றேன். முடிந்தால் அரசாங்கம் தடுத்துப்பார்க்கட்டும் என்றும் சவால் விடுக்கின்றேன்.
இதே போன்று எமது மக்கள் அனுபவித்த, அனுபவித்து வருகின்ற துன்பங்கள் ஏற்பட்ட இழப்புக்களை நேரடியாகப் பார்த்தவர்கள், அறிந்தவர்கள் எதிர்காலச் சந்ததியின் நலனுக்காகவும் இனத்தின் விடுதலைக்காகவும் சாட்சியங்களை வழங்க வேண்டும்.
அதேநேரம் இலங்கையிலிருந்து சாட்சியங்களை கடிதம் முலமாக அனுப்புவதனைத் தவிர்த்துக் கொண்டு மின்னஞ்சல் மூலமாக வழங்க வேண்டும்.
புலம் பெயர்ந்திருக்கின்றவர்கள் எவ்வாறாயினும் சாட்சியங்களை வழங்க முடியும். அதேநேரம் கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் சாட்சியமளிப்பதற்கு வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணி ஆகிய கட்சிகளை நாடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjq6.html

Geen opmerkingen:

Een reactie posten