மகிந்தரை தூக்கிப் போட்ட விடையம் இதுவாகத்தான் இருக்க முடியும்: பயம் கொள்வது ஏன் ?
[ Sep 02, 2014 05:47:58 PM | வாசித்தோர் : 21055 ]
சில தினங்களுக்கு முன்னர், இலங்கையின் முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்கா மியான்மார் சென்றுள்ளார். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் சந்திரிக்கா மியான்மார் செல்வதே மகிந்தருக்கு தெரியாதாம். சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்ற, மியான் மாரின் எதிர்கட்சி தலைவி மற்றும் அமெரிக்காவின் பாரிய அனுசரணையைப் பெற்ற ஆன் சான் சுகியை சந்திரிக்கா சந்தித்துள்ளார். இதுவரை காலத்தில் அமெரிக்க அதிபர் ஒருவர், ஒரு பெண்ணி வீடு தேடி நேரடியாகச் சென்றது இதுவே முதல் தடவையாகும். ஆம் அதிபர் ஓபாமா தனது பிரத்தியேக ஹெலிகொப்டரில், சுகியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். தற்போது எல்லாம் சுகியை சந்திப்பது எல்லாம் சுலபமான விடையம் அல்ல. ஒரு நாட்டு அதிபரை கூட சந்தித்து விடலாம் ஆனால் சுகியை சந்திப்பது என்பது புளியங்கொம்பாக உள்ளது.
இன் நிலையில் மிகவும் இலகுவாக சந்திரிக்கா அவரைச் சென்று சந்தித்தது மட்டுமல்ல, தன்னோடு சிலரையும் அழைத்துச் சென்றுள்ளார். புலிகளை வென்றபின்னர் மகிந்தர் சந்திரிக்காவை மதிப்பதே கிடையாது. ஒரு பொருட்டாக எண்ணுவதும் இல்லை. சொத்து குவிப்பு வழக்கு ஒன்றை போட்டு, அவரை முடக்க நினைத்தார். சந்திரிக்கா ஏதாவது பேசினால், உடனே அந்த வழக்கை மீளவும் திறக்கும் நீதிமன்றம். அவர் பேசாமல் இருந்தால் அந்த வழக்கு நிலுவையில் இருக்கும். இப்படி தான் கடந்த 10 ஆண்டுகளாக சந்திரிக்காவை பூட்டிவைத்திருந்தார் மகிந்தர். ஆனால் சந்திரிக்காவில் உலகளாவிய செல்வாக்கு இன்னும் இருக்கிறது என்பதனை அவர் உணரவே இல்லை. இந்த புகைப்படங்கள் வெளியான மறு நிமிடமே இது தொடர்பாக தனக்கு அறிக்கை ஒன்றை தருமாறு அவர் கோரியுள்ளார்.
சந்திரிக்கா மகிந்தருக்கு எதிரான நிலையில் தற்போது இருக்கிறார். இதேவேளை ஆன் சான் சுகி, அமெரிக்காவின் ஆதரவில் உள்ளார். இதனால் இவர்கள் கலந்துரையாடல் ஏன் திடீரென நடைபெறவேண்டும் ? இவர்கள் எது தொடர்பாக விவாதித்தார்கள் ? ஒரு மரியாதை நிமிர்த்தமாக இது நடந்ததா ? என்ற பல கேள்விகள் உள்ளது. எது எவ்வாறு இருந்தாலும் சந்திரிக்காவை நம்பவேண்டாம் என்று, அமைச்சர்கள் பலர் மகிந்தருக்கு மந்திர ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/919.html
சமீலாவை மயக்க ஊசியை போட்டு கற்பழித்த மருத்துவர்: உண்மையில் நடந்தது என்ன ?
[ Sep 03, 2014 02:28:04 PM | வாசித்தோர் : 2070 ]
மயக்கம் தெளிந்து எழுந்த சமீலா தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்துள்ளார். இதனால் இவர்கள் இருகவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்துள்ளது. சற்றும் எதிர்பார்காத வகையில் மருத்துவர் இந்திக சுதர்சனபாலகே, அவரை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இருப்பினும் உடம்புக்கு முடியாமல் வந்த சமீலா , மருந்தை உட்கொண்டுவிட்டு செல்லும்வேளை, தடக்கி மாடியில் இருந்து விழுந்துவிட்டதாக மருத்துவர் பொலிசாருக்கு கூறினார். ஆனால் அருகில் உள்ளவர்களை விசாரித்த பொலிசார் அதனை நம்பவில்லை. சமீலா இறப்பதற்கு முன்னதாக, வாக்குவாதப்படும் சத்தம் கேட்டதாக அயலவர்கள் கூறியிருந்தார்கள்.
மேலும் குறித்த இந்த மருத்துவரிடம் பெண்கள் சென்றால், அவர் அங்க சேஷ்ட்டை செய்வது வழக்கம் என்றும் அயலில் உள்ள பெணகள் கூறியதை அடுத்தே பொலிசார் மருத்துவரை கைதுசெய்ததாக கூறப்படுகிறது. பிரேதப்பரிசோதனையில் சமீலா கற்பழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. டி.என்.ஏ (மரபணு) பரிசோதனையும் இதனை உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து மருத்துவருக்கு மரணதண்டனை வழங்கி நீதிபதி இன்று தீர்பளித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/920.htmlயாழ்ப்பாண குறு நில மன்னன் சிங்கள சிறையில் அடைப்பு: ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கியது !
[ Sep 03, 2014 02:50:55 PM | வாசித்தோர் : 1505 ]
விடுதலைப் புலிகள், யாழ் மண்ணை விட்டு அகன்று, வன்னி பெரு நிலப்பரப்பை கைப்பற்றிய பின்னர், ஈ.பி.டி.பி ஒட்டுக் குழு யாழ் மண்ணை ஆக்கிரமித்துக்கொண்டது. டக்ளஸ் தேவானந்தா என்னும் தேசத்துரோகியின் செல்லப் பிள்ளையாக கடந்த 20 ஆண்டுகள் இருந்தவர் தான், கமலேந்திரன் ஆவார். இவர் ஆடாத ஆட்டம் கிடையாது. யாழில் ஒரு குறு நில மன்னன் போல இவர் ஆட்டம் போட்டார். பின்னர் வடமாகான சபையின் எதிர்கட்சி தலைவர் என்ற பதவியையும் பெற்றார். மகிந்தரிடம் சென்றார் ஆசி பெற்றார். ஆனால் தற்போது கம்பி எண்ணுகிறார். இவரை பிணையில் எடுக்க மகிந்தரும் வரவில்லை மாறாக டக்ளசும் வரவில்லை. சிங்களம் மற்றும் அதன் கைக்கூலிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று இப்ப தான் இவருக்கு புரிந்திருக்கும்.
கொடிகட்டிப் பறந்துவந்த கமலேந்திரன், 2013ம் ஆண்டு நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஸிசன் என்பரை அவரது வீட்டில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதற்கு றெக்ஸிசனின் மனைவி அனீட்டாவும் உடந்தையாக இருந்துள்ளார். அதாவது தனது கணவரை போட்டு தள்ள அவரும் கமலேந்திரனுக்கு உதவியுள்ளார். அப்ப கமலேந்திரனுக்கும் அனீட்டாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு ? என்று எல்லாம் எங்களிடம் நீங்கள் கேட்க்க கூடாது. அது பெரிய கதை ! இது இவ்வாறு இருக்க 2013ம் ஆண்டு கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கமலேந்திரனை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். கமலேந்திரன் தான் றெக்ஸியைச் சுட்டார் என்பதற்கு தற்போது போதிய ஆதாரம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (02.09.14) எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, கமலேந்திரனையும் அனிட்டாவையும் எவரும் பிணையெடுப்பதற்கு முன்வரவில்லை. இதனையடுத்து, அவர்களின் தடுப்புக் காவலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார். வெறும் 5 லட்சம் ரூபா பிணையில் செல்லலாம் என்று நீதிபதி கூறினார். ஆனால் என்ன ஆச்சரியம் எவரும் பிணையில் எடுக்க முன்வரவே இல்லை. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள் ஒரு நாள் இப்படி தான் அடங்குவார்கள் போல இருக்கே ?
கிரிமினல்களின் கைரேகைகள் புகைப்படங்கள் இனி ஒரே இடத்தில்: சிங்களத்தின் அதீத திட்டம் !
[ Sep 03, 2014 03:31:41 PM | வாசித்தோர் : 55 ]
மேலும் இதனை நேற்றைய தினம் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்தும் வைத்துள்ளார்கள். குறித்த இந்த வலையமைப்பு தமிழர்களையும் முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களையும் குறிவைத்து தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஏன் எனில் வட கிழக்கில் இருந்து மட்டும் கொழும்புக்கு இணைக்க என சுமார் 30 க்கும் மேற்பட்ட இணைப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிலங்கையில், இதுபோன்ற இனைப்பு நிலையங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கூறப்படுகிறது. இது வட கிழக்கு தமிழர்களை குறிவைப்பதாக உள்ளதா என்ற சந்தேகம் இதனால் வலுப்பெற்றுள்ளது.
ஒரு உதாரணத்திற்கு யாழில் ஒரு தமிழர் தப்பிச் சென்றால், மறு நிமிடமே அவர் கைரேகை மற்றும் அவரது புகைப்படத்தை இலங்கையில் உள்ள முழு பொலிஸ் நிலையத்திலும் அத்தகவலை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை தோன்றவுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக இதனை பயன்படுத்துமா சிங்களம் ?
http://www.athirvu.com/newsdetail/923.html
Geen opmerkingen:
Een reactie posten