[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 09:44.18 AM GMT ]
இந்தோனேசிய தூதரகம் வரை பேரணியாக சென்ற இராவணா பலய அமைப்பு தூதரக அதிகாரி ஒருவரிடம் இது சம்பந்தமான மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளது.
இந்தோனேசியாவில் மாத்திரமல்லாது இலங்கையிலும் பௌத்த வழிப்பாட்டுத் தலங்கள் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக இராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனையில் ஆட்டோ சாரதிகள் போராட்டம்
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஆட்டோ தரிப்பிடத்தில் தமிழ் பிரதேச ஆட்டோக்கள் தரிப்பதனை தடுத்து நிறுத்தும் வகையில் சகோதர இன ஆட்டோ சாரதிகள் செயற்படுகின்றமையை கண்டித்து, இதற்கான தீர்வினை ஜனாதிபதி பெற்றுத்தர வேண்டும் என கோரி இன்று தமிழ் ஆட்டோ சாரதிகள் சங்கம் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தது.
கல்முனை பிரதேச செயலகம் முன்பாக இப்பேரணி ஆரம்பமாவதற்கு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவேளை அதற்கான தடை உத்தரவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்து.
இருந்தும் சுமூகமான முறையில் இந்தப்பேரணியானது ஒரே இடத்தில் நடைபெற்றது.
இந்த பேரணியில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட ஆட்டோ சாரதிகள் சார்பாக சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் பல காலமாக இரண்டு இனங்களும் ஒற்றுமையாக அவ்விடத்தில் தான் இருந்து ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தோம், ஆனால் தற்பொழுது இது முஸ்லிம் மக்களுக்குரிய இடம் எனத் தெரிவித்து தடை விதித்துள்ளனர்.
இதனால் சுமார் 200 ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மாநகர மேயரிடம் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.
அவர் எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தருவதாக இல்லை. ஆனால் இது சம்பந்தமாக தீர்வு பெறப்பட்டதாக பொய்யான அறிக்கைகள் ஊடகங்களில் வெளியிடுகின்றார்.
நாங்கள் இவை சம்பந்தமாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இனியபாரதி, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர போன்றோரை நாடி இதற்கான தீர்வினை பெற்றுத்தரும்படி கூறியிருந்தோம்.
அவர்கள் ஒருவரும் இதற்கான தீர்வினை பெற்றுத்தரவில்லை. இதனாலேயே இப்பேரணியை ஒழுங்கு செய்திருந்தோம். அதனையும் முழுமையாக செய்யமுடியாத நிலையில் உள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதன்போது முக்கிய பிரதிநிதிகள் சிலர் கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரை சந்திக்க சென்றவேளை, மேயரும் மாநகர ஆணையாளரும் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
இதன்போது அங்கிருந்த மேயரின் பிரத்தியேக செயலாளர் பி. எல். ஏம். பாறுக் அவர்களிடம் தங்களது கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
இதேவேளை இந்த பிரச்சினை சம்பந்தமாக அறிக்கை மேயரினால் தயாரிக்கப்பட்டு அறிக்கையின் பிரதிகள் மாநகர சபை உறுப்பினர் அமிர்தலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்தாகவும் தெரிவித்து அனுப்பப்பட்ட பிரதிகளையும் இதன்போது காண்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மாநகர மேயர் நிசாம் காரியப்பர் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு இப்பிரச்சினை சம்பந்தமாக வினாவியபோது,
இந்த பிரச்சினையை தமிழ் தேசியக் கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், மாநகர சபை உறுப்பினர் அமிர்தலிங்கம் ஆகியோரே என்னிடம் முறையிட்டனர்.
இதற்கிணங்க தீர்வினை பெறும் நோக்கில் அறிக்கையினை தயாரித்து அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவர்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன் பதில் எதுவும் கிடைக்கவில்லை.
கிடைத்தவுடன் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சரியாக இருந்தால் அமுல்படுத்தப்படும். திருத்தவேண்டியிருத்தால் திருத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் போன்றோரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
இவ்வாறான கடிதம் எமக்கு இதுவரை எமது கைக்குக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUku2.html
நைஜீரிய உயர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 10:19.57 AM GMT ]
இலங்கையின் முப்படை நலன்புரித் திட்டங்கள் குறித்து ஆராயும் நோக்கில் நைஜீரிய உயர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த நைஜீரிய உயர் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் 11 பேர் உள்ளடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
நேற்று இலங்கைக்கு விஜயம் செய்த இந்தக் குழுவினர் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இராணுவத் தளபதி தயாரட்நாயக்கவிற்கும் நைஜீரிய விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் எம்.ஆர். மோர்கனுக்கும் இடையில் இராணுவத் தலைமையகத்தில் நேற்று சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUku4.html
வாரியபொல இளைஞர் பிணையில் விடுதலை
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 10:23.40 AM GMT ]
சந்திரகுமார என்னும் செல்வா என்பவரே இவ்வாறு இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
100 000 ரூபா ரொக்கப் பிணையின் அடிப்படையில் குறித்த இளைஞர் விடுதலை செய்வதாக வாரியபொல நீதவான் அறிவித்துள்ளார்.
முறைப்பாடு செய்த யுவதிக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாரியபொல பஸ் தரிப்பிடத்தில் யுவதி ஒருவர் இளைஞர் ஒருவரை சராமரியாக தாக்கும் முகநூல் காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தாக்குதலின் காரணமாக கேட்டல் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையாக தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய யுவதியையும் பொலிஸார் கைதுசெய்து பின்னர் பிணையில் விடுதலை செய்திருந்தனர்.
21 வயதான திலினி இமால்கா என்ற யுவதியே குறித்த இளைஞரை தாக்கியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUku5.html
ராஜபக்சவின் செவிப்பறைகள் கிழிய முழங்கிய டெசோ அமைப்பினர்
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 12:03.18 PM GMT ]
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் ‘டெசோ’ அமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொடி, பதாதைகள் ஏந்தி வந்திருந்தனர்.
இதில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் கருனாநிதி உரையாற்றுகையில்,
பிரதமர் அண்மையிலே வெளியிட்ட கருத்து, அதிலும் குறிப்பாக ஈழத்திலே இருந்து டெல்லிக்கு வந்து பிரதமரைச் சந்தித்த குழுவினர் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்றவகையில் இந்தியாவினுடைய புதிய அரசும் நிச்சயமாக நடந்து கொள்ளும்.
நம்முடைய தமிழ் இனத்திலே ஒரு பகுதி இலங்கையிலே வாழ்கின்ற பகுதியிலே உள்ளவர்கள் எந்த அளவுக்கு இன்றையதினம் அடிமைகளாய், வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
விடிவு காலமே தெரியாதா, தமிழனாகப் பிறந்தால், அதுவும் இலங்கையிலே பிறந்தால், இலங்கைத் தமிழன் என்ற நிலையிலே வாழ வேண்டிய அளவுக்கு ஒரு நிலை ஏற்பட்டால், அவன் பொட்டுப்பூச்சிகளாய், புன்மைத்தேரைகளாய் வாழ வேண்டுமா என்ற கேள்விக்கு எப்பொழுதுதான் நாம் விடை காணப்போகிறோம் என்று விட்ட பெரு மூச்சினுடைய அடையாளம்தான் இன்று நடைபெறுகின்ற இந்த அணிவகுப்பு.
அணிவகுப்பு என்பதால், நாம் படை கொண்டு இலங்கைக்குச் செல்லப்போகிறோம் என்பதல்ல. ஆனால் படை கொண்டு காட்டுகின்ற வல்லமையை விட அதிக வல்லமை நம்முடைய இயக்கங்களுக்கு உண்டு. நம்முடைய பேச்சுக்கு உண்டு. நம்முடைய செயலுக்கு உண்டு.
நாம் பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், தமிழகத்திலே இருந்த தலைவர்கள் வழியில் இலங்கைத் தமிழனைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்த முடிவை நிறைவேற்றுகின்ற வகையில் தொடர்ந்து போராட வேண்டும்.
பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழந்தால் என்ன, வாழாவிட்டால் என்ன என்கின்ற அந்தச் சூளுரையை ஏற்க வேண்டுமென்பதற்காகத் தான் இன்றைய தினம் இங்கு மாத்திரமல்ல, தமிழகத்திலே இன்றைக்கு மாத்திரமல்ல, தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும். அப்படி நடைபெற்றால்தான் அது கேளாக்காதினருடைய காதுகளைத் திறக்கும் என்பதற்காகத்தான் நாம் இன்றைய தினம் இந்த முழக்கத்தை தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலே நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த முழக்கம் கேட்டு ரஜபக்சவின் செவிப்பறைகள் கிழியட்டும் என்பதல்ல, ரஜபக்சவை நாம் அமைதியான முறையிலே தான், அறவழியிலேயே தான் கேட்கிறோம். அவர் வழியிலே அல்ல. ரஜபக்சவின் வழி வன்முறை வழி. பலாத்கார வழி. படுகொலை வழி. தமிழர்களுடைய பிணங்களைக் காணுகின்ற வழி. அந்த வழியை நாம் மேற்கொள்ளாமல் அறவழியில், அண்ணா வழியில், அய்யா வழியில், தமிழர்களுடைய நெறிப்படி ஏற்றுக்கொண்ட அந்த வழியில் சந்திக்கின்றோம்.
நாம் அனைவரும் சேர்ந்து போராடினால் நாம் அடையவிருக்கின்ற சுதந்திரத்தை இந்தியாவிற்கு மாத்திர மல்ல, இந்தியாவுக்கு அருகே உள்ள ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மையான சுதந்திரத்தை, சுயமரியாதை பெறுவதற்கு நாம் நிச்சயமாக நம்முடைய போராட்டத்தின் மூலம் வெல்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என கருனாநிதி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkvz.html
Geen opmerkingen:
Een reactie posten