தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

ஐ.நா பாதுகாப்பு சபை தொடர்பில் ஸ்பெயின் விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்: ஜனாதிபதி மஹிந்த!



ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக தெரிவாக போட்டியிடும் ஸ்பெயினை, ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மானுவல் கார்சியா மார்க்லோ மார்ப்பிலிக்கும் இடையில் இன்று நடைபெற்ற  சந்திப்பின் போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் இருப்பதுடன் நிரந்தரமற்ற 10 உறுப்பு நாடுகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுகின்றன.
பாதுகாப்புச் சபையில் உறுப்பு நாடாக தெரிவாக இலங்கை தம்மை ஆதரிக்க வேண்டும் என ஸ்பெயின் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இன்று இலங்கைக்கு வந்த ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை காலையில் அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன் போது விவாதிக்கப்பட்டது.
இதன் போது கருத்து வெளியிட்ட ஸ்பெயின் அமைச்சர், ஸ்பெயின் பல ஆண்டுகள் பயங்கரவாத பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் பயங்கரவாத்தின் தாக்கத்தை ஸ்பெயின் நன்கு புரிந்துள்ளது எனவும் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
அதேவேளை போருக்கு பின்னர் வடக்கு கிழக்கில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட கண்ணி வெடி அகற்றல், மீள்குடியேற்றம், புனர்வாழ் மற்றும் புனரமைப்பு உட்பட அரசாங்கம் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளை ஜனாதிபதி மகிந்த, ஸ்பெயின் அமைச்சரிடம் விளக்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiq7.html

Geen opmerkingen:

Een reactie posten