[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 11:01.21 AM GMT ]
எல்எம்டி என்ற முன்னணி வர்த்தகத்துறை இதழின் ஆய்வில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்துக்கு ஆய்வில் பங்கேற்ற 59வீதமானோர் தமது ஆம் என்ற பதிலை வழங்கியுள்ளனர்.
பெரும்பாலும் அரசியல்வாதிகளே தமது அரசியல் நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இனப்பிரச்சினை என்ற விடயம் காலம் கடந்தது என்ற கருத்தையே ஆய்வில் பங்கேற்ற 62 வீதமானோர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiry.html
மஹிந்த மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது: லக்ஷ்மன் கிரியெல்ல
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 11:10.31 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அவர் மூன்றாவது முறையாக அந்த பதவிக்கு போட்டியிட தகுதியற்றவர்.
இந்த விடயம் தொடர்பாக சட்ட திருத்தத்தை மேற்கொண்டு அது குறித்து சட்ட விளக்கத்தை பெற்ற பின்னர் அவர் மூன்றாவது முறையாக போட்டியிட முடியும். எனினும் அப்படியான சட்ட விளக்கங்கள் எதுவும் இதுவரை பெறப்படவில்லை.
18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதனை இலகுவாக மேற்கொண்டிருக்கலாம். அது சம்பந்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
எவ்வாறாயினும் இது தொடர்பான உயர்நீதிமன்றத்தில் இறுதி முடிவை பெற வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUirz.html
அரச பணியாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்: விஜயதாஸ ராஜபக்ச
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 11:17.33 AM GMT ]
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள தேர்தல் தொடர்பான அனைத்து சட்ட ஒழுங்குகளையும் ஆளும் கட்சி உதறிதள்ளியுள்ளதாக விஜயதாஸ குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது ஆளும் கட்சியினர் திறந்த நிலையில் அரச சொத்துக்களை பயன்படுத்துவதாகவும் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் விஜயதாஸ தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUir0.html
கூட்டமைப்பு மீண்டும் அதிகாரங்களை கோருகிறது:
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 11:21.06 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்திருந்ததாக திவயின தெரிவித்துள்ளது.
இதனை தவிர முல்லைத்தீவு வாக்காளர் பட்டியலில் 5 ஆயிரம் சிங்களவர்களின் பெயர்கள் இருப்பதாக கூட்டமைப்பு, இந்திய பிரதமரிடம் கூறியிருப்பது பற்றி அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை தாம்பூழத்தில் வைத்து கொடுக்க அரசாங்கம் தயாரில்லை என அரசாங்கத்தின் உயர் மட்டம் கூறியதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்திக்கொள்ளும் நோக்கில் கூட்டமைப்பு பிரித்தானிய பிரதமர் ஜோன் ரன்கினிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
எனினும், தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் இந்திய உட்பட மேற்குலக நாடுகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் இலங்கை தமிழர்களை வடக்கிற்கு அழைத்து வந்து குடியேற்றுமாறும் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUir1.html
Geen opmerkingen:
Een reactie posten