[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 09:11.08 AM GMT ]
தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை சமநிலை செய்யும் நோக்கில், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான தனது மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.
ஜப்பானிய பிரதமர் இன்று பங்களாதேஷின் டாக்கா நகருக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இதனையடுத்து அவர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக ஜப்பானிய பிரதமரின் இலங்கை வருகை அமைந்துள்ளது.
இலங்கை ஏற்கனவே சீனாவின் உதவியுடன் நாடு முழுவதும் பாரிய அளவிலான அபிவிருத்தி மற்றும் கட்டுமான திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை அதிகரிக்கும் நோக்கில், ஜப்பானிய பிரதமர் இன்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்க உள்ளதுடன் நாளைய தினம் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளார்.
டோக்கியோவில் இருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பானிய பிரதமர்,
ஜப்பானிய பிரதமர் ஒருவர் 14 வருடங்களுக்கு பின்னர் பங்களாதேஷூக்கும் 24 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கும் விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பொருளாதரம் மற்றும் அரசியல் களங்களில் வளர்ந்து வரும் செல்வாக்கை கொண்ட நாடுகள் என ஜப்பானிய பிரதமர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiq2.html
20 லட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரைகளை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 09:27.59 AM GMT ]
கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் இன்று காலை மேற்கொண்ட தேடுதலில் இந்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்தடைக்கு பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகள் விட்டமின் மாத்திரைகள் எனக் கூறி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள சில மருந்தகங்களுக்கு இவை விநியோகிக்கப்படவிருந்தன. கைப்பற்றிய மாத்திரைகளின் பெறுமதி சுமார் 20 லட்சம் என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiq3.html
தலைமன்னார் கடலில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 10:06.14 AM GMT ]
மன்னார் பொலிஸ் பிரிவின் மோசடி தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கடற்படையின் புலனாய்வு பிரிவின் உதவியுடன் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இரண்டு பிளாஸ்டிக் கொள்கலன்களில் இட்டு கஞ்சா தொகை கடலில் மூழ்க செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அவற்றில் 18.15 கிலோ கிராம் கஞ்சா இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiq4.html
ஜனாதிபதி மஹிந்த – ஜப்பான் விசேட தூதுவர் அகாஷி இன்று சந்திப்பு
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 10:27.58 AM GMT ]
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே நாளை இலங்கைக்கு விஜயம் செய்வதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்..
இந்தநிலையில் ஜப்பான் பிரதமரின் வருகைக்கு முன்னோடியான சந்திப்பாகவே யசுசி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
எனினும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இரண்டாம் இணைப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ஜப்பான் நாட்டு விசேட பிரதிநிதி யசூசி அகாசி இன்று த. தே. கூட்டமைப்பை ஏழு மணிக்கு நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இந்த சந்திப்பின் போது தற்போதைய வட மாகாண நிலைமை மற்றும் வடமாகாண சபை நிர்வாகத் தடைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடாத்தப்படவுள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவரின் விஜயத்தின் போது வட மாகாண அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவ வேண்டிய அவசியத்தையும் இவரிடம் எடுத்துக்காட்ட த. தே.கூ ஆயத்தமாகி வருகின்றது.
ஆனால் ஜப்பானிய விஷேட தூதுவருக்கு வட பகுதிக்கு விஜயம் மேற்கொள்ள அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் யசூசி அகாசி தான் வடபகுதிக்கு அவசியம் செல்ல வேண்டுமென அரசிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து அரசு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiq5.html
தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது: கோத்தபாய கடும் சீற்றம்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 10:36.18 AM GMT ]
சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்றிருந்த பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் பொழுது, இக்கருத்தினை கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் துணையால் தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகியதாகவும், விடுதலைப் புலிகளுக்கு நீண்டகாலமாக உதவிகள் நல்கிய வெளிநாட்டினர் பலரும் இதன் உருவாக்கத்தில் உள்ளனர் எனவும் தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
மாநாட்டில் கோத்தபாய ராஜபக்ச, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பில் கருத்துரைக்கும் பொழுது:
இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள வி.உருத்ரகுமாரன் 'நாடுகடந்த அரசாங்கம்' ஒன்றை நிறுவும் வேலைகளில் இறங்கினார். இந்த அமைப்பு தன்னை 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்' என்று அழைக்கின்றது.
தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று கூறும், இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள் என்னவென்றால், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஒரு தனி நாட்டை உருவாக்குவதற்கு, அயல் நாட்டு அரசாங்கங்களிடம் முறையிட்டு அவர்களின் ஆதரவைப் பெறுவதுதான்.
அவர்கள் சொல்லிக்கொள்ளும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் சுமார் இருபது 'அமைச்சர்களும்' , 'உதவி அமைச்சர்களும்' உள்ளனர். இது உருவானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபலமான தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் துணையால் தான்.
விடுதலைப் புலிகளின் இந்தத் தீவிரமான ஆதரவாளர்களில் விடுதலைப் புலிகளுக்குப் பல ஆண்டுகளாக உதவிகள் நல்கிய வெளிநாட்டினரும் உள்ளனர் என தெரிவித்திருந்தார்.
பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக நடைமுறைத் தமிழீழ அரசினை அழித்து, தமிழர் தாயகத்தினை சிங்களம் அரசபயங்கரவாதம் முழுமையாக ஆக்கிரமித்து விட்டவேளை, தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, தமிழீழம் என்ற நிலைப்பாட்டினை அனைத்துலக அரங்கில் உயிர்ப்புடன் வைத்திருப்பதானது, சிறிலங்காவுக்கு எப்போதுமே அச்சம் தரக்கூடிய ஒன்று என்பதனையே, கோத்தபாயவின் இக் கருத்து வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiq6.html
உண்மையா?அரசியல் இல்லையே!
Geen opmerkingen:
Een reactie posten