போரின் பொது இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றிய விபரங்களை உறுதி செய்யும் ஆவணங்களை வழங்க புலம்பெயர் சமூகத்திற்கு முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வன்னிப் போரின் போது சுமார் 147,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இவர்கள் யார், எங்கு வசித்தார்கள், அவர்களின் உறவினர்கள் யார் என்பது பற்றிய தகவல்களை வெளியிட புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட 147, 000 பேர் புதைக்கப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களை உறுதி செய்யவும் முடியவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் மக்கள் கொல்லப்பட்டதாக போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நான்கு அரச சார்பற்ற நிறுவனங்களினால் அதனை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.
அமெரிக்க செய்மதிகள் கூட இரண்டு புலிகளின் மயானங்களை மட்டுமே கண்டுபிடித்துள்ளன என சிங்கள ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjr5.html
Geen opmerkingen:
Een reactie posten