தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

பிரிட்டன் உயர்ஸ்தானிகர் வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தை?

இராணுவ முகாம்களை அமைக்க வடக்கு முதலமைச்சரிடம் அனுமதி கோர வேண்டியதில்லை!– அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 11:41.02 PM GMT ]
இராணுவ முகாம்களை அமைப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் அனுமதி கோர வேண்டிய அவசியம் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு வடக்கு முதலமைச்சரிடம் அனுமதி கோரப்படவில்லை.
அண்மையில் நடைபெற்ற முல்லைத்தீவு அபிவிருத்திக் கூட்டத்தின் போது இராணுவ முகாம் அமைப்பது குறித்து அனுமதி கோரப்படவில்லை என விக்னேஸ்வரன் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து இராணுவ அதிகாரியிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதற்கு, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இராணுவ அதிகாரி பதிலளித்துள்ளார்.
இலங்கையின் எந்தவொரு இடத்திலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு அரசாங்கத்திற்கு முடியும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் வடக்கு முதலமைச்சர் தலையீடு செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவ முகாம் அமைப்பது குறித்து வட மாகாண சபை முதலமைச்சர் எழுப்பிய கேள்வி தொடர்பில், இராணுவ அதிகாரியிடம் குறித்த பத்திரிகை நேர்காணல் நடத்தியுள்ளது.
நேர்காணலில் பங்கேற்ற போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjr4.html

பிரிட்டன் உயர்ஸ்தானிகர் வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தை?
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 11:53.33 PM GMT ]
இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் வடக்கில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
உயர்ஸ்தானிகர் ரன்கின், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது அங்கு வாழ்ந்து வரும் தமிழ் குடும்பங்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வன்னியில் இராணுவ பிரசன்னம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என ரன்கின் தமிழ் குடும்பங்களுக்கு உறுதியளித்துள்ளார்.
பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ரன்கீனுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சிவமோகன், ரவிகரன் ஆகியோரும் இந்த இரகசிய சந்திப்புக்களில் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, பிரிட்டன் உயர்ஸ்தானிகரின் கோரிக்கைக்கு அமைய இராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாது என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார் என திவயின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjr6.html

Geen opmerkingen:

Een reactie posten