பிரித்தானியாவில் திருடர்கள் மீது தமிழ் குடும்பத்தார் உக்கிர தாக்குதல்
http://www.jvpnews.com/srilanka/81035.html
உல தற்கொலைகள் வரிசையில் இலங்கை முன்னணி…
உலகில் அதிகளவு தற்கொலைகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தை வகிக்கின்றது. உலகில் அதிகளவு தற்கொலைகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் கயானா முதலாம் இடத்தை வகிக்கின்றது. கயனாவில் 100,000 பேரில் 44.2 பேர் தற்கொலை செய்துகொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இரண்டாம் மூன்றாம் இடங்களை வகிக்கின்றன. வடகொரியாவில் ஒரு லட்சம் பேரில் பேரில் 38.5 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தென்கொரியாவில் தென் கொரியாவில் ஒரு லட்சம் பேரில் 28.9 பேர் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஒரு லட்சம் பேரில் 28.8 பேர் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகின் மிக முக்கியமான சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாக தற்கொலைகள் மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நஞ்சு அருந்துதல், தூக்கிடுதல் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற வழிகளின் மூலம் அதிகளவில் தற்கொலைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகில் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வோர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/81050.html
அடுத்ததும் மகிந்தவே கெஹலிய முழக்கம்
எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு தடையில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக எந்தத் தரப்பினரும் சவால் விடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த சவால்களுக்கு அரசாங்கம் அஞ்சப் போவதில்லை எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவது குறித்து தேவை ஏற்பட்டால் சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் போட்டியிட முடியும் என பெரும் எண்ணிக்கையிலான சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் போட்டியிட முடியும் என பெரும் எண்ணிக்கையிலான சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப் போவதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/81053.html
UNPக்குள் அடிபாடு! மகிந்தவுக்கு அடுத்த யுகம் ஆரம்பம்…
அதேவேளை சஜித் பிரேமதசாவுக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்க வேண்டாம் என கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் என்பதை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்றும் மங்கள சமரவீர ரவி கருணாநாயக்க ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்கள சமரவி;ர அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஆனால் மங்கள சமரவீர அதற்கு உரிய பதிலளிக்கவில்லை என்றும் கட்சித் தகவல்கள் குறிப்பிட்டன.
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களில் மங்கள சமரவீர கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் அது தொடர்பாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி வருவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
http://www.jvpnews.com/srilanka/81056.html
சாட்சியமளிக்க தயார் பொன்சேகா சவால்
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரையும் சுட்டுக் கொலை செய்யுமாறு தாம் உத்தரவிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இவ்வாறு தாம் உத்தரவிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சிமளிக்கும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த எச்சரிக்கைகளுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அஞ்சாமல் சாட்சியமளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/81059.html
தமிழரை அழிக்க சங்கரியின் மாற்றுத் திட்டம் அம்பலம்
இன்றைய தமிழ் மக்களின் பலமாகவும் ஏக பிரதிநிதியாகவும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு இந்திய விஜயத்தால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை சிதைப்பதற்கு மகிந்த அரசால் முடியாத நிலையில் அதனை வெற்றிகரமாக செய்வதற்கு சங்கரியை நியமித்துள்ளார்
வட-கிழக்கில் தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு சங்கரியை ஒரு கருவியாக பயண் படுத்துவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது
“இன்றிருப்பது தந்தை சா.ஜே.வே.செல்வநாயகம் உருவாக்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சி அல்ல. விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான தங்கன் உருவாக்கிய ‘தமிழரசுக் கட்சி – தங்கன் பிரிவு’தான்.” இப்படித் தெரிவித்திருக்கின்றார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி.
இன்று தாம் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே அவர் இப்படித் தெரிவித்திருக்கின்றார். நாளை வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு ஆரம்பமாகவிருக்கையிலேயே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள், ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து 1949 ஆம் ஆண்டு பிரிந்து வந்து தொடங்கப்பட்டதே தமிழரசுக் கட்சி.
அதன் பின் புதிய குடியரசு அரசியல் சாசனம் அமுல்படுத்தப்பட்டபோது 1972 இல் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கி அதைத் தமிழர் விடுதலைக் கூட்டணி என பெயர் மாற்றம் செய்து தன்னுடன் ஜீ.ஜீ.பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரை இணைத் தலைவர்களாக தெரிவுசெய்து தனது பழைய தமிழரசுக் கட்சியை இயங்கவிடாது முடக்கிவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவே 1977.04.26 ஆம் திகதி மறைந்தார் செல்வநாயகம்.
அவரின் பூதவுடல் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட கூட்டணியின் கொடியால் போர்த்தப்பட்டு தகனக்கிரியை செய்யப்பட்டது. அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதிவரை அக் கட்சி எதுவித நடவடிக்கையுமின்றி செயலற்றிருந்தது. தொடர்ந்து 26 ஆண்டுகள் இயங்காத தமிழரசுக் கட்சியை சேனாதிராசா அவர்கள் 14.10.2003 கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. தங்கனுடன் தொடர்புகொண்டு அவரின் வற்புறுத்தலால் புதுப்பித்தார்.
ஆதலால் தற்போது இயங்குவது தங்கன் உருவாக்கிய தமிழரசுக் கட்சியே தவிர தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியல்ல; ‘தமிழரசுக் கட்சி தங்கன் பிரிவு’ என்பதே இதற்குப் பொருத்தமான பெயராக இருக்கும். விடுதலைப் புலிகள் மூலம் சகல உதவிகளையும பெற்றுவிட்டு, அவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பது பெரிய துரோகமாகும் தந்தை செல்வா அகிம்சைவாதி. விடுதலைப் புலிகள் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள்.
தந்தை செல்வாவிற்கு புலி முத்திரை குத்தவேண்டாம். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எவரும் இதுவரை எவருக்கும் விடுதலைப் புலிகள்தான் தமிழரசுக் கட்சியை புதுப்பித்தனர் என்று கூறவில்லை – இது மக்களுக்கும் தந்தை செல்வாவிற்கும் செய்யும் மாபெரும் துரோகமாகும். இதுவும் ஒரு மோசடியேயாகும். ஆகவே ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகிய அமைப்புக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன். – என்று உள்ளது.
http://www.jvpnews.com/srilanka/81063.html
Geen opmerkingen:
Een reactie posten