தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 september 2014

மேடை கோணலாம்! டக்ளஸின் கண்டுபிடிப்பு!

கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்…

இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து காங்கேசன்துறைக் கடற்படையினரால் இன்று (02) அதிகாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.
அத்துடன், மீனவர்களுடன் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவனை, அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார். இராமநாதபுரம் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் வந்த மேற்படி மீனவர்களின்  ஒரு படகு கடலில் மூழ்கிய நிலையில், மற்றைய படகுடன் 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், யாழ் கடற்றொழில் நீரியல் வளத்துறைப் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே, அம்மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, படகு மூழ்கிய நிலையில் மேலும் 6 இந்திய மீனவர்களை கச்சதீவுக்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து செவ்வாய்க்கிழமை (02) காலையில் மீட்டதாக காங்கேசன்துறைக் கடற்படையினர் தெரிவித்தனர்.


மேற்படி 6 மீனவர்களும் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து வந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவர்கள் தற்போது கடற்படையினரின் கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.In-FesamainIn-Fesamain-01
http://www.jvpnews.com/srilanka/80911.html

மேடை கோணலாம்! டக்ளஸின் கண்டுபிடிப்பு!

இதனிடைய அத்தகைய நிகழ்வொன்றினில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர் வடமாகாண அபிவிருத்திக்கு அரசும், ஆளுநரும் தடையாக இருப்பதாக கூட்டமைப்பினர் கூறிவருகின்றமை ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
கைதடியில் அமைந்துள்ள வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வடக்கு மாகாண முதலமைச்சர் உரையாற்றும் போது ஹெலியில் வருபவர்களால் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது என தெரிவித்திருந்ததாக யாழிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் சென்று வருவதற்கு இலவசமாக ஹெலியின் உதவியை கூட்டமைப்பினர் கேட்டிருந்ததையும் டக்ளஸ் அப்போது சுட்டிக்காட்டினார்.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயலாபத்திற்காக விஷமப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் இக்கூற்றானது ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளால் எமது கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் வளங்கள் அழிக்கப்படுவதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் நான் எடுத்து விளக்கியிருந்த நிலையில் இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடனான கலந்துரையாடலின் போது இந்தியப் பிரதமர் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் அதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்திருந்தார்.ஆனால் அண்மையில் இந்தியப் பிரதமரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்திருந்தபோது அவர் கேட்டுக் கொண்டதற்கமைவாக கால அவகாசத்தை வழங்குவதாக கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதன்காரணமாக தற்போது வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான இந்திய மீனவர்களின் தொழிற்துறை நடவடிக்கைகளால் எமது மீனவர்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கால அவகாசம் வழங்கியதே முக்கிய காரணமென்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்; வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளர் அனுர எஸ் வீரரத்ன, வாழ்வின் எழுச்சி திணைக்கள உதவி ஆணையாளர் மகேஸ்வரன், திட்ட இணைப்பாளர் ரகுநாதன், தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி, யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச இணைப்பாளர் சாள்ஸ், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் உள்ளிட்டோர்; உடனிருந்தனர்.EpdpEpdp-01Epdp-02Epdp-03Epdp-04
http://www.jvpnews.com/srilanka/80904.html

Geen opmerkingen:

Een reactie posten