மகிந்தரை தூக்கிப் போட்ட விடையம் இதுவாகத்தான் இருக்க முடியும்: பயம் கொள்வது ஏன் ?
சில தினங்களுக்கு முன்னர், இலங்கையின் முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்கா மியான்மார் சென்றுள்ளார். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் சந்திரிக்கா மியான்மார் செல்வதே மகிந்தருக்கு தெரியாதாம். சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்ற, மியான் மாரின் எதிர்கட்சி தலைவி மற்றும் அமெரிக்காவின் பாரிய அனுசரணையைப் பெற்ற ஆன் சான் சுகியை சந்திரிக்கா சந்தித்துள்ளார்.
இதுவரை காலத்தில் அமெரிக்க அதிபர் ஒருவர், ஒரு பெண்ணி வீடு தேடி நேரடியாகச் சென்றது இதுவே முதல் தடவையாகும். ஆம் அதிபர் ஓபாமா தனது பிரத்தியேக ஹெலிகொப்டரில், சுகியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். தற்போது எல்லாம் சுகியை சந்திப்பது எல்லாம் சுலபமான விடையம் அல்ல. ஒரு நாட்டு அதிபரை கூட சந்தித்து விடலாம் ஆனால் சுகியை சந்திப்பது என்பது புளியங்கொம்பாக உள்ளது.
இன் நிலையில் மிகவும் இலகுவாக சந்திரிக்கா அவரைச் சென்று சந்தித்தது மட்டுமல்ல, தன்னோடு சிலரையும் அழைத்துச் சென்றுள்ளார். புலிகளை வென்றபின்னர் மகிந்தர் சந்திரிக்காவை மதிப்பதே கிடையாது. ஒரு பொருட்டாக எண்ணுவதும் இல்லை. சொத்து குவிப்பு வழக்கு ஒன்றை போட்டு, அவரை முடக்க நினைத்தார்.
சந்திரிக்கா ஏதாவது பேசினால், உடனே அந்த வழக்கை மீளவும் திறக்கும் நீதிமன்றம். அவர் பேசாமல் இருந்தால் அந்த வழக்கு நிலுவையில் இருக்கும். இப்படி தான் கடந்த 10 ஆண்டுகளாக சந்திரிக்காவை பூட்டிவைத்திருந்தார் மகிந்தர். ஆனால் சந்திரிக்காவில் உலகளாவிய செல்வாக்கு இன்னும் இருக்கிறது என்பதனை அவர் உணரவே இல்லை. இந்த புகைப்படங்கள் வெளியான மறு நிமிடமே இது தொடர்பாக தனக்கு அறிக்கை ஒன்றை தருமாறு அவர் கோரியுள்ளார்.
சந்திரிக்கா மகிந்தருக்கு எதிரான நிலையில் தற்போது இருக்கிறார். இதேவேளை ஆன் சான் சுகி, அமெரிக்காவின் ஆதரவில் உள்ளார். இதனால் இவர்கள் கலந்துரையாடல் ஏன் திடீரென நடைபெறவேண்டும் ? இவர்கள் எது தொடர்பாக விவாதித்தார்கள் ? ஒரு மரியாதை நிமிர்த்தமாக இது நடந்ததா ? என்ற பல கேள்விகள் உள்ளது. எது எவ்வாறு இருந்தாலும் சந்திரிக்காவை நம்பவேண்டாம் என்று, அமைச்சர்கள் பலர் மகிந்தருக்கு மந்திர ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

http://www.jvpnews.com/srilanka/80927.html
Geen opmerkingen:
Een reactie posten