புதுக்குடியிருப்புப் பகுதியில் கனகசபை சிங்கரட்ணம் என்பவரின் காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளனர். தனது காணிகளையும் வீடுகளையும் விடுவிக்குமாறு குறித்த முதியவர் பல தடவைகள் இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.
எனினும் இராணுவத்தினர் அவரின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவேயில்லை. இதனால் மனமுடைந்த அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். அப்போதும் இராணுவத்தினரிடம் சென்று தான் இறப்பதற்கு முன்னர் காணிகளை தன்னிடம் தந்துவிடுமாறு அவர் கோரியிருக்கின்றார்.
இராணுவத்தினர், இந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்றும் சிங்கரட்ணத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் இன்னும் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சுகயீனமுற்று உயிரிழந்து விட்டார்.
இராணுவத்தினர், இந்தக் காணிகளை விடுவிக்க முடியாது என்றும் சிங்கரட்ணத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் இன்னும் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சுகயீனமுற்று உயிரிழந்து விட்டார்.
சிங்கரட்ணத்தின் ஆசைகளை அறிந்திருந்த அவரின் பிள்ளைகள், தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கு முன்னர் அவரது சடலத்தை அவரின் காணிக்கு முன்பாக வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் அங்கு வந்த சிறிலங்காப் படையினரும் காவல்துறையினரும் அங்கு கூடி நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் இறுதி நிகழ்வுகளை கூட தமது சொந்த நிலத்தில் செய்ய முடியாத நிலையை சிங்கள அரசு ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தில் சிங்களப்படைகளின் அத்துமீறல்களும் நில அபகரிப்புக்களும் அதிகரித்துள்ளன.

தமிழ் மக்களின் இறுதி நிகழ்வுகளை கூட தமது சொந்த நிலத்தில் செய்ய முடியாத நிலையை சிங்கள அரசு ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தில் சிங்களப்படைகளின் அத்துமீறல்களும் நில அபகரிப்புக்களும் அதிகரித்துள்ளன.
http://www.jvpnews.com/srilanka/81292.html
Geen opmerkingen:
Een reactie posten