அக்காசியை மிரட்டிய மகிந்தர்! உடன் விரைகிறார் ஜப்பானிய பிரதமர்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து ஜனாதிபதிக்கும் அக்காசிக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் நிலக்கண்ணி வெடி அகழ்வுப் பணிகள் குறித்தும் ஜனாதிபதி, அக்காசிக்கு விளக்கம் அளித்துள்ளார். இதேவேளை, நிலக்கண்ணி வெடி அகழ்வு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என அக்காசி தெரிவித்துடன் வழமை போன்று அக்காசியின் பயணங்கள் சிலவற்றிற்கு தடை விதித்ததுடன் வடக்கு விஜயத்திற்கும் முட்டுக் கட்டையாக இருந்ததுடன் பலவித அழுத்தங்களையும் கொடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கதாக இருந்தாலும் இந்தியப் பிரதமர் ஜப்பான் சென்று வந்த நிலையில் அவரின் சில முக்கிய செய்திகளும் பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு விசேட விமானம் மூலம் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே மற்றும் அவரது பாரியார் அக்கி அபே இன்று மதியம் ஒரு மணியளவில் இலங்கை வந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஜப்பானியப் பிரதமரை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேரில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு விசேட விமானம் மூலம் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே மற்றும் அவரது பாரியார் அக்கி அபே இன்று மதியம் ஒரு மணியளவில் இலங்கை வந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஜப்பானியப் பிரதமரை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேரில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
பின்னர் அவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் வரவேற்று அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவர். இந்தச் சந்திப்பு முடிடைவடைந்த பின்னர் ஜப்பானியப் பிரதமர் தமது பாரியாருடன் நாடாளுமன்றுக்கு செல்லவுள்ளார். இதன் பின்னர் இன்றிரவு சினமன் ஹோட்டலில் இடம்பெறும் விசேட வர்த்தக கலந்துரையாடலிலும் பங்கேற்கவுள்ளார்.
இதன்போது பல வர்த்தக ஒப்பந்தங்களிலும் அவர் கைச்சாத்திடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த ஜப்பான் பிரதமரின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்தன. ஜப்பானியப் பிரதமர் ஒருவர் 24 வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






http://www.jvpnews.com/srilanka/81250.html
யாழ் பல்கலைகழகத்தின் திருகுதாளம் அம்பலம்…
வழிநடாத்த வேண்டிய செனற்றே குற்றவாளிகளாலும்,கோமாளிகளாலும் நிறைந்து வழியும்போது விரிவுரையாளர்களும்,பேராசிரியர்(யை) களும் தமது அடாவடித்தனங்களை,பாலியல்லீலைகளை தொடர்வார்கள்தானே..?
யாழ்பல்கலைகழகம் முழுதும் ஒவ்வொரு துறையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள்..கவனிப்பின்மை, ஏனோதானோ மனப்பாங்கு, நிர்வாகஒழுங்கீனம், அரசியல்குறுக்கீடுகள், தகுதியான போதனைமுறையும் போதனைஆசிரியர்களும் இன்மை என்று இப்போது நாறிக்கொண்டிருக்கிறது…
இவைகள் எதனையும் சரிசெய்யவோ,சரிசெய்ய முயற்சிக்கவோ பல்கலைகழகநிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விழாக்களையும்,கண்காட்சிகளையும் நடாத்தி மந்திரிகளை அழைத்து
பூசி மெழுகுகிறது..
பூசி மெழுகுகிறது..
இப்படியே தொடர்ந்தால் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகமிக சிரமமாக இருக்கும். வேலைவழங்கும் நிறுவனங்களின் கணிப்பில் இந்த பல்கலைகழகம் தாழ்ந்து போய்க்கொண்டே இருக்கிறது..
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்போல,23ம் புலிகேசியின் அமைச்சரவைபோல கோணங்கித்தனமான இந்த நிர்வாகத்துக்கு எதிராக,இதன் செற்பாடற்ற தன்மைக்கு எதிராக உங்கள் குரல்களை உரத்து கொடுங்கள். இன்றைய மௌனம் என்பது நாளையை அழிவுக்கு கொண்டுபோய் விட்டுவிடும். இப்போது இல்லாதுவிட்டால் இனி எப்போது…எனவே இன்றே..
http://www.jvpnews.com/srilanka/81283.html
மோடி சொல்லைக் கேட்பேன்! ஆனால் 13+ இல்லை! மகிந்தர்
அடுத்த வருடம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலின் தேர்தல் விஞ்ஞாபனமாக இந்த அரசியல் அமைப்பு திட்டத்தை சிறிலங்கா பயன்படுத்தவுள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி மற்றும் காவற்துறை அதிகாரிகள் ரத்து செய்யப்படவுள்ளதுடன், மாகாண சபைகளுக்கு காணப்பட்ட மேலும் சில அதிகாரங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை வைத்து இந்திய அரசாங்கத்தை ஏமாற்றிவிட முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை வைத்து இந்திய அரசாங்கத்தை ஏமாற்றிவிட முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/81286.html
Geen opmerkingen:
Een reactie posten