தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

புதிய ஆணையாளரின் தலைமையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் 27 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
எதிர்­வரும் 26 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்ள இந்த கூட்டத்தொடரில் மனித உரிமை அலு­வ­ல­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ரணை குறித்த வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இந்த 27 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் தொடர்­பா­கவும் பல நாடு­களின் பூகோள கால மீளாய்வு நிலை­மைகள் குறித்தும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.
விசே­ட­மாக ஈராக்­கிலும் சிரி­யா­விலும் தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலை­மைகள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.
இலங்கை விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வரை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை குழுவின் ஏற்­பாட்­டாளர் சன்ட்ரா பெய்டா அல்­லது புதிய மனித உரிமை ஆணை­யாளர் இந்த வாய்­மூல அறிக்­கையை வெளி­யி­ட­வுள்ளார்.
கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் புதிய ஆணை­யாளர் செயித் அல் ஹுசைன் ஆரம்ப உரையை நிகழ்த்­த­வுள்ளார். அந்த உரை­யின்­போது இலங்கை விவ­காரம் குறித்தும் புதிய மனித உரிமை ஆணை­யாளர் பிரஸ்­தா­பிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை இலங்­கையின் சார்பில் இந்தக் கூட்டத் தொடரில் அதி­கா­ரிகள் மட்ட தூதுக்­கு­ழுவே கலந்­து­கொள்­ள­வுள்­ளது. அமைச்­சர்கள் மட்ட தூதுக்­குழு இம்­முறை கலந்­து­கொள்­ள­வில்லை.
அந்த வகையில் ஜெனி­வாவில் உள்ள இலங்­கையின் வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத் ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான தூதுக்­குழு 27 ஆவது கூட்டத்தொடரில் கலந்­து ­கொள்­ள­வுள்­ளது. அத்­துடன் சட்டமா அதிபர் திணைக்களத்திலி­ருந்து இரண்டு உயர் அதி­கா­ரிகள் ஜெனி­வா­வுக்­கான தூதுக்­கு­ழுவில் இணைந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUiw1.html

Geen opmerkingen:

Een reactie posten