தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும்: இல்லையேல் போராட்டம் என்கிறது பொதுபல சேனா



மட்டக்களப்பிலிருந்து ஆன்மீக பாத யாத்திரை இன்று ஆரம்பம்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 02:48.42 PM GMT ]
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு வருடா வருடம் மட்டு.மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் ஏற்பாடு செய்யப்படும் ஆன்மீக பாத யாத்திரையானது இன்று ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான யாத்திரையானது ஐந்து நாட்களைக் கொண்டதாக இடம்பெறுகின்றது.
மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று ஆரம்பமாகிய பாதயாத்திரை எதிர்வரும் 13ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் வேளை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தை சென்றடையவுள்ளது.
முதலாம் நாள் ஆன்மீக பாத யாத்திரையில் இருநூறுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்து கொண்டு நந்திக் கொடிகளை ஏந்தியவாறும், அரோகரா என்ற நாமத்தை உச்சரித்து தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
இப்பாதயாத்திரையானது, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி குறுமண்வெளி, எருவில், பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, கல்லடி, மட்டக்களப்பு, மாமாங்கம், ஊறணி, பிள்ளையாரடி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, மயிலம்பாவெளி, ஏறாவூர், செங்கலடி, கொம்மாதுறை, வந்தாறுமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை,
சந்திவெளி, கோரகல்லிமடு, கிரான், கும்புறுமூலை, கறுவாக்கேணி, வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, மயிலங்கரச்சை, மாங்கேணி, மாவடியோடை, பனிச்சங்கேணி, வாகரை, புளியங்கண்டலடி, கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்ச்சேனை, புச்சாக்கேணி, கதிரவெளி ஆகிய இடங்களில் பிரதான வீதி வழியாக உள்ள ஆலயங்களுக்கு சென்று தரிசித்து வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற யாத்திரையின் போது தங்களுக்கு சில அற்புதங்கள் இடம்பெற்றதாகவும், மற்றும் தங்களுடைய நேர்த்திக் கடன்கள் நிறைவு பெற்றதாகவும் யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள் சிலர் தெரிவித்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் மற்றும் சைவப்புலவர் திருமதி.எஸ்.ஞானசூரியம் ஆகியோர் சமய நற்சிந்தனை வழங்கினர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhu6.html
றெக்சியன் படுகொலை வழக்கு: மனைவிக்கு பிணை
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 03:18.08 PM GMT ]
நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் றெக்சியன் படுகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகச் சிறையில் இருந்த றெக்சியனின் மனைவி அனிதா இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை கடந்த 29ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன், றெக்சியனின் மனைவி அனிதா ஆகியோருக்கு நீதிமன்று பிணை அனுமதி வழங்கியது.
எனினும், அவர்களை பிணை எடுக்க யாரும் முன்வராத நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிறைச்சாலைக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று அனிதா சார்பில் அவரது உறவினர் ஒருவர் பிணையில் எடுக்க முன்வந்ததையடுத்து அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.
நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கமலேந்திரனை பிணையில் எடுக்க இதுவரை யாரும் முன்வராத காரணத்தினால் அவர் தொடர்ந்தும் சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhu7.html
ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும்: இல்லையேல் போராட்டம் என்கிறது பொதுபல சேனா
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 03:43.25 PM GMT ]
நாட்டில் உள்ள ஷரிஆ சட்டம் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமேனவும் பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் வங்கி முறைமை தடை செய்யப்பட வேண்டும். இதற்காக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் நாட்டில் பிரச்சினை இல்லை. ஆனால், அதனைவிடப் பயங்கரமாகவுள்ள இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும். இதுவே எமது பாரிய பிரச்சினையாகும்.
இந்த நாட்டில் ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் மசோதா கொண்டுவருவதும் சட்டவிரோதமானது. அதனை நிறைவேற்றி சட்டமாக்குவதும் சட்ட விரோதமானது.
இந்த நாட்டில் காஸி நீதிமன்றங்கள் ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இவை எமது நாட்டுக்குத் தேவையற்றது.
மேலும், ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும்.
பல்கலைக்கழகத்தில் உள்ள சகல பீடங்களும் ஷரிஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுகின்றன.
இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாச்சாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய ஷரிஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குகின்றன. 
இந்த நாட்டிலிருந்து ஷரிஆ சட்டம் துடைத்தெறியப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சட்டங்களை நடைமுறைப்படுத்தும் இந்த தனியார் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhvy.html

Geen opmerkingen:

Een reactie posten